ரூ.29 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு!.. அதனால என்ன?.. ஊழியர்களுக்கு 'சர்ப்ரைஸ்' கொடுத்த பிரபல ஐடி நிறுவனம்!.. யாருப்பா அந்த அதிர்ஷ்டசாலி!?
முகப்பு > செய்திகள் > வணிகம்பிரபல ஐடி நிறுவனமான காக்னிசன்ட் (CTS), தனது ஊழியர்களுக்கு ப்ரொமோஷன் அளிக்கும் நடவடிக்கைகளை விரைவில் தொடங்க இருக்கிறது.
கொரோனா எதிரொலியால் பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில், காக்னிசன்ட் தனது ஊழியர்களுக்கு வழங்க இருக்கும் ப்ரொமோஷன்களை துரிதப்படுத்தியுள்ளது.
அந்நிறுவனத்தின் கொள்கைப்படி, வருடத்தில் 2 முறை சிறந்த ஊழியர்களுக்கு ப்ரொமோஷன் வழங்கப்படும். ஆனால், கடந்த மார்ச் மாதம் செய்திருக்க வேண்டிய ப்ரொமோஷன்கள் கொரோனாவால் தடைபட்டதால், வரும் அக்டோபர் மாதம் கூடுதலாக ப்ரொமோஷன்களை வழங்கப்போவதாக காக்னிசன்ட் அறிவித்துள்ளது.
அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் ப்ரொமோஷன் பணிகள், ஊழியர்களின் வேலைத்திறன், டீம் மேலாண்மை, புதுமைகளை முன்னெடுத்தல், நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு பங்களித்தல் போன்ற அளவீடுகளைக் கொண்டு நிர்ணயிக்கப்படும் என அந்நிறுவனம் தெளிவு படுத்தியுள்ளது.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் சிடிஎஸ் நிறுவனத்தில், சுமார் 2 லட்சத்துக்கும் மேலான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். ஜூன் மாதத்தில் நிறைவடைந்த காலாண்டில், காக்னிசன்ட்டின் வருவாய் 3.4 விழுக்காடு குறைந்துள்ளது ($4 பில்லியன் = ரூ.29 ஆயிரம் கோடி). எனினும், கொரோனா கால நெருக்கடியில், கம்பெனிக்கு பக்கபலமாக நின்ற ஊழியர்களை கௌரவிக்கும் வகையில், ப்ரொமோஷன் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக சிடிஎஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்