கொரோனா தடுப்பூசியால் உருவான 9 புதிய கோடீஸ்வரர்கள்.. வெளியான பட்டியல்.. சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களை சேர்ந்த 9 பேர் புதிதாக கோடீஸ்வரர்கள் பட்டியல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசியால் உருவான 9 புதிய கோடீஸ்வரர்கள்.. வெளியான பட்டியல்.. சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா..?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 16 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 34 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் நோய் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Covid vaccines create 9 new billionaires, says PVA

இந்த நிலையில் உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க, பிரிட்டனை சேர்ந்த பீப்பிள்ஸ் வேக்‌ஷின் அலையன்ஸ் (People's Vaccine Alliance) என்ற அமைப்பு போராடி வருகிறது. இந்த அமைப்பு, கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் நிறுவனங்களை சேர்ந்த 9 பேர் புதிதாக கோடீஸ்வரர்களாக உயிர்ந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பீப்பிள்ஸ் வேக்‌ஷின் அலையன்ஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் நிறுவங்களை சேர்ந்த 9 பேர் புதிய கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். இந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்வால், இவர்களது சொத்து மதிப்பு 1 லட்சத்து 44 ஆயிரத்து 750 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Covid vaccines create 9 new billionaires, says PVA

இந்த தொகையில் குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் அனைவருக்கும் 1.3 முறை தடுப்பூசி செலுத்த முடியும். உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் வசிக்கும் இந்த நாடுகளுக்கு, 0.2 சதவீதம் மட்டுமே தடுப்பூசி கிடைக்கிறது. கொரோனா தடுப்பூசியின் காப்புரிமையை பொதுவுடமை ஆக்க வேண்டும். இல்லையென்றால், தடுப்பூசி விலை, விற்பனை ஆகியவற்றை நிர்ணயிப்பது இந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். இதனால் ஏழை மற்றும் குறைந்த வருவாய் உள்ள நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி கிடைக்காத நிலை ஏற்படும்’ என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Covid vaccines create 9 new billionaires, says PVA

புதிதாக கோடீஸ்வரர்களாக உயர்ந்த கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள்,

1. மாடர்னா (Moderna) நிறுவனத்தின் சிஇஓ, ஸ்டீபன் பான்செல் (Stephane Bancel) - 4.3 பில்லியன் டாலர்

2. பயோஎன்டெக் (BioNTech) சிஇஓ மற்றும் இணை நிறுவனர், உகூர் சாஹின் (Ugur Sahin) - 4 பில்லியன் டாலர்

3. மாடர்னா நிறுவனத்தின் நோய் எதிர்ப்பு நிபுணர் மற்றும் முதலீட்டாளர், திமோதி ஸ்பிரிங்கர் (Timothy Springer) - 2.2 பில்லியன் டாலர்

4. மாடர்னா நிறுவனத்தின் தலைவர் நௌபர் அஃபியன் (Noubar Afeyan) - 1.9 பில்லியன் டாலர்

5. ROVI (மாடர்னா நிறுவனத்துடன் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் பேக்கேஜ் செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது) நிறுவனத்தின் தலைவர் ஜுவான் லோபஸ் பெல்மோன்ட் (Juan Lopez Belmonte) - 1.8 பில்லியன் டாலர்

6. மாடர்னா நிறுவனத்தின் விஞ்ஞானி ராபர்ட் லாங்கர் (Robert Langer) - 1.6 பில்லியன் டாலர்

7. சீனாவை சேர்ந்த கன்சினோ பயோலாஜிக்ஸ் (CanSino Biologics) நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி மற்றும் இணை நிறுவனர் ஜு தாவோ (Zhu Tao) - 1.3 பில்லியன் டாலர்

8. கன்சினோ பயோலாஜிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் மூத்த துணைத்தலைவர் கியு டோங்சு (Qiu Dongxu) - 1.2 பில்லியன் டாலர்

9. கன்சினோ பயோலாஜிக்ஸ் நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனர் மற்றும் மூத்த துணைத்தலைவர்  மாவோ ஹுய்ன்ஹோவா (Mao Huinhoa) - 1 பில்லியன் டாலர்

மற்ற செய்திகள்