உங்களோட 'லாஸ்ட்' வொர்க்கிங் டே ... 3 நிமிடங்கள் மட்டுமே பேசி... 3700 பேரை 'தூக்கிய' நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் வேலையிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருபுறம் கொரோனா மறுபுறம் வேலையிழப்பு என மக்கள் தொடர்ந்து பிரச்சினைகளில் சிக்கித்தவித்து வருகின்றனர்.

உங்களோட 'லாஸ்ட்' வொர்க்கிங் டே ... 3 நிமிடங்கள் மட்டுமே பேசி... 3700 பேரை 'தூக்கிய' நிறுவனம்!

இந்த நிலையில் உபெர் நிறுவனம் சுமார் 3700 பேரை அதிரடியாக வேலையை விட்டு நீக்கியுள்ளது. 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 2.9 பில்லியன் டாலர் நஷ்டத்தினை உபெர் சந்தித்துள்ளது. இதனால் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சீர் செய்யும் வகையில் இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் எடுத்துள்ளதாக தெரிகிறது. வேலை நீக்கத்தை ஊழியர்களுக்கு நேரடியாக தெரிவிக்காமல் ஜூம் செயலி வழியாக வீடியோ கால் செய்து தெரிவித்து இருக்கின்றனர்.

அதில், ''உபெர் நிறுவனத்தில் உங்களின் கடைசி வேலை நாள் இதுதான்,'' என ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஊழியருடனும் வெறும் 3 நிமிடங்களுக்கு குறைவாக மட்டுமே இந்த வீடியோ கால்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. கொரோனாவுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட உபெர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.