5 வருஷம் 'சம்பளமில்லா' விடுமுறை... 50% அலவன்ஸ் கட் எல்லாம் உண்டு... ஆனா யாரையும் 'வேலையை' விட்டு தூக்க மாட்டோம்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

தங்களது ஊழியர்கள் யாரையும் வேலையை விட்டு நீக்க மாட்டோம் என அறிவித்துள்ளது.

5 வருஷம் 'சம்பளமில்லா' விடுமுறை... 50% அலவன்ஸ் கட் எல்லாம் உண்டு... ஆனா யாரையும் 'வேலையை' விட்டு தூக்க மாட்டோம்!

கொரோனா தொற்றால் மொத்த உலகமும் வேலையிழப்பு, வறுமை போன்ற இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றன. சிறு நிறுவனங்கள் தொடங்கி பெரிய நிறுவனங்கள் வரை ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன.

இந்த நிலையில் அரசு நிறுவனமான ஏர் இந்தியா ஊழியர்கள் யாரையும் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம் என அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்நிறுவனம் ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகள் 50 சதவீதம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்து இருந்தது.

மேலும் ஏப்ரல் மாதம் முதலே ஊக்கத்தொகை கணக்கில் கொள்ளப்பட்டு பாதியாகக் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ 25,000 ரூபாய்க்கு மேல்  சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த சலுகைக் குறைப்பு அமல்படுத்தப்படுகிறது. பைலட்கள் மற்றும் கேபின் பணியாளர்களுக்கு இந்த சலுகைக் குறைப்பு பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல 5 வருடம் வரை ஊழியர்களை சம்பளமில்லா விடுமுறையில் அனுப்பி வைக்கவும் ஏர் இந்தியா திட்டமிட்டு வருகிறது. தனியார் விமான நிறுவனமான இண்டிகோ 10% ஊழியர்களை சமீபத்தில் பணிநீக்கம் செய்த நிலையில், ஏர் இந்தியா இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்