போன மாசம் '1 லட்சம்' பேருக்கு... வேலை வழங்கிய 'பிரபல' நிறுவனம்... இந்த மாசம் 'எவ்ளோ' பேருக்குன்னு பாருங்க?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஊரடங்கு உத்தரவால் உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் பலவும் திணறிக்கொண்டு இருக்க, அமேசான் நிறுவனம் தொடர்ந்து வேலைக்கு ஆட்களை எடுத்து வருகிறது. கடந்த மாதம் எக்கச்சக்க ஆர்டர்கள் குவிந்ததால்  சுமார் 1 லட்சம் பேரை அந்நிறுவனம் வேலைக்கு அமர்த்தியது.

போன மாசம் '1 லட்சம்' பேருக்கு... வேலை வழங்கிய 'பிரபல' நிறுவனம்... இந்த மாசம் 'எவ்ளோ' பேருக்குன்னு பாருங்க?

இந்த நிலையில் மீண்டும் அமேசான் நிறுவனம் 75,000 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டு இருக்கிறது. ஊரடங்கால் மக்கள் அனைவரும் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆன்லைன் நிறுவனங்களின் வியாபாரம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கிறது.

இதனால் மீண்டும் 75000 ஆயிரம் பேரை வேலையில் அமர்த்த திட்டமிட்டு இருக்கும் அமேசான் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. மேலும் பிற நிறுவனங்களில் வேலை இழந்தவர்கள் தங்களது நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.