ஐடி ஊழியர்களை அதிகளவில் 'பணிநீக்கம்' செய்த முன்னணி நிறுவனம்... 3 மாசத்துல இத்தனை ஆயிரம் பேரா?... வெளியான 'அதிர்ச்சி' தகவல்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் ஏராளமான நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. குறிப்பாக ஐடி நிறுவனங்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. வீட்டில் இருந்தே ஊழியர்கள் பணிபுரிய வாய்ப்பு அளித்தாலும் கூட, சிக்கன் நடவடிக்கை கருதி தங்களது ஊழியர்களை பெரும்பாலான நிறுவனங்கள் வெளியில் சொல்லாமல் வேலைநீக்கம் செய்து வருகின்றன.

ஐடி ஊழியர்களை அதிகளவில் 'பணிநீக்கம்' செய்த முன்னணி நிறுவனம்... 3 மாசத்துல இத்தனை ஆயிரம் பேரா?... வெளியான 'அதிர்ச்சி' தகவல்!

இதில் காக்னிசண்ட் நிறுவனம் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை அந்நிறுவனம் சுமார் 10,500 ஊழியர்களை வேலைநீக்கம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக கொரோனா தொற்றுக்கு முன்னிருந்தே காக்னிசண்ட் எக்கச்சக்க ஊழியர்களை வெளியில் அனுப்பியுள்ளது. 2018-ம் ஆண்டின் ஜூன் காலாண்டு இறுதியில் சுமார் 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

2020-ம் ஆண்டின் முதல் காலாண்டில் 2,91,700 ஊழியர்கள் இருந்துள்ளனர். ஆனால் இந்த ஊழியர்கள் எண்ணிக்கை ஜூன் காலாண்டில் 2,81,200 ஆக குறைந்துள்ளது. அதாவது சுமார் 10,500 ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றனர். காலாண்டு வாரியான ஒப்பீட்டில், 24% ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அவர்களில் 11% தாமாக வெளியேறியவர்கள். மீதமுள்ள, 13% ஊழியர்கள் தேவைக்கு அதிகமாக இருப்பதாக ஒதுக்கப்பட்டுள்ளனர்.

முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் 4 பில்லியன் டாலராக உள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 3.4% வீழ்ச்சியாகும். எனினும் நடப்பு ஆண்டில் இதன் வருவாய் 16.4 - 16.7 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று இந்த நிறுவனம் கணித்துள்ளது.

கொரோனா தொற்றால் மற்ற ஐடி நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. என்றாலும் அது காக்னிசண்ட் அளவுக்கு இல்லை. டிசிஎஸ் நிறுவனம் 4,786, இன்போசிஸ் நிறுவனம் 3,138, ஹெச்சிஎல் 136, விப்ரோ 1082, டெக் மஹேந்திரா 1820 என மற்ற நிறுவனங்கள் 10,962 பேரை மொத்தமாக பணிநீக்கம் செய்திருக்கின்றன. ஆனால் காக்னிசண்ட் நிறுவனம் தனியாக 10,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்