இனி உங்களுக்கு 'அந்த' கவலை வேண்டாம்...! 'வொர்க் ஃப்ரம் ஹோம்ல ரொம்ப கஷ்ட படுறீங்கனு தெரியும்...' - 'வேற லெவல்' அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா பரவல் காரணமாக பல தொழில் துறை நிறுவனங்கள் ஒர்க் ஃப்ரம் ஹோம் என்ற முறையில், தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய சொல்லி வருகிறது. தற்போது ஒரு சில நிறுவனங்கள் பாதி சதவீத ஊழியர்களை நிறுவனங்களில் வந்து வேலை செய்யவும் கூறியுள்ளது.
இந்நிலையில் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு என, சிட்டிகுரூப் நிறுவனம் "ஜூம் ஃப்ரீ ஃப்ரைடே" என்று அறிவித்து, வேலை நேரத்தில் வரும் அழைப்புகளை குறைத்து ஊழியர்களுக்கு ஆசுவாசத்தை அளித்து வருகிறது.
வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற நடைமுறை பெரும்பாலான ஊழியர்களுக்கு கடுமையானதாக இருப்பதால், ஊழியர்களின் உடல்நலம் மற்றும் மன நலனில் பெரும் விளைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய சிட்டி குரூப் கம்பெனி தலைமை நிர்வாக அதிகாரி ஜேன் ஃப்ரேசர் ராய்ட்டர்ஸ், 'தற்போது இருக்கும் அசாதாரமான சூழல் குறித்து, எனது சொந்த அனுபவத்திலிருந்து எனக்குத் தெரியும். வீடு மற்றும் வேலைக்கு இடையில் இந்த தொற்று நல்வாழ்வைப் பாதித்து வருகிறது. இதனால் உங்களுக்காக மகிழ்ச்சியூட்டும் நிலையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளேன்' எனக் கூறியுள்ளார்.
மேலும் சிட்டி குரூப் கம்பெனி வெளியிட்ட அறிக்கையில், 'வெள்ளிக்கிழமைகளில் எந்தவொரு ஜூம் மீட்டிங் நடைபெறாது. மேலும் தலைமை நிர்வாக அதிகாரி ஊழியர்களை விடுமுறைக்கு செல்லவும் ஊக்குவித்தார், அதுமட்டுமில்லாமல் நிறுவனம் மே 28 அன்று விடுமுறை அறிவித்ததுள்ளது.
சிட்டிகுரூப், தொற்றுநோய்க்குப் பிறகு, வங்கியில் பெரும்பான்மையான ஊழியர்கள் 'ஹைப்ரிட்' என்ற முறையில் கம்பெனிக்கு வரலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்முறையின் படி ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து வாரத்தில் மூன்று நாட்களாவது மற்றும் வீட்டிலிருந்து வாரத்தில் இரண்டு நாட்கள் வரை வேலை செய்ய முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்