'அடிக்கு மேல் அடி... மரண அடி!.. ஆயிரம் கோடிகளில் வருவாய் இழப்பு'!.. பிரபல ஐடி நிறுவனம் எடுத்த அதிரடி முடிவால்... கலங்கும் ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

பிரபல ஐடி நிறுவனமான சிஸ்கோ (CISCO) கொரோனா பேரிடரால் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.

'அடிக்கு மேல் அடி... மரண அடி!.. ஆயிரம் கோடிகளில் வருவாய் இழப்பு'!.. பிரபல ஐடி நிறுவனம் எடுத்த அதிரடி முடிவால்... கலங்கும் ஊழியர்கள்!

Restructuring அடிப்படையில் முன்கூட்டியே பணிஓய்வு வழங்குதல் (early retirement program) மற்றும் ஆட்குறைப்பு (layoff) ஆகியவற்றை முன்னெடுக்க உள்ளதாக சிஸ்கோ விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து வீடியோ கான்ஃபெரன்ஸில் பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சக் ராபின்ஸ், 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான செலவினங்களை இனிவரும் காலங்களில் குறைக்கவிருப்பதாக தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு மட்டும், சிஸ்கோவிற்கு சுமார் 11.71 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 11.97 பில்லியன் அமெரிக்க டாலர் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என அந்நிறுவனம் கணித்துள்ளது. ஆனால், நிபுணர்கள் 12.25 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் எனக் கணக்கிட்டுள்ளனர்.

சிறிய நிறுவனங்களை விலைக்கு வாங்குவதன் மூலம், சிஸ்கோவின் நிதி மேலாண்மை ஸ்திரமாக நிர்வகிக்கப்படுகிறது.

இதற்கிடையே, வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களால் இந்த மோசமான சூழலில் இருந்து சிஸ்கோ மீண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்