பறிபோன ‘நம்பர் 1’ பணக்காரர் இடம்.. முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளிய ‘சீன’ தண்ணீர் பாட்டில் அதிபர்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானியை சீனாவின் தண்ணீர் பாட்டில் அதிபர் பின்னுக்கு தள்ளினார்.
சீனாவை சேர்ந்த தொழிலதிபர் சோங் சான்சன் (Zhong Shanshan), தண்ணீர் பாட்டில், பயாலாஜிக்கல் பார்மசி, நோங்பு ஸ்பிரிங் ஆகிய நிறுவனங்களுக்கு அதிபராக உள்ளார். இவரது நிறுவனங்கள் ஊடகம், காளான் வளர்ப்பு, நலவாழ்வு ஆகிய துறைகளில் காலுன்றி உள்ளன.
இந்த நிலையில் புளூம்பெர்க் நிறுவனம் ஆசிய பணக்காரர்களின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி சோங் சான்சனின் சொத்து மதிப்பு 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 5 லட்சத்து 68 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியை முந்திய சோங் சான்சன் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆகியுள்ளார்.
மேலும் உலகளிவில் 11-வது பெரும் பணக்காரராக சோங் சான்சன் விளங்குகிறார். ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 5 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்