'இப்படி பயத்தை காட்டிட்டியே குமாரு'... இன்றைய தங்க விலை நிலவரம்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலை குறைந்து வந்தது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

'இப்படி பயத்தை காட்டிட்டியே குமாரு'... இன்றைய தங்க விலை நிலவரம்!

கொரோனா காரணமாக ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றிலிருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது.

இந்நிலையில் 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. அதே நேரத்தில் நேற்று தங்க விலை சற்று அதிகரித்தது. இதனால் தொடர்ந்து குறைந்து வந்த தங்க விலை இனிமேல் அதிகரிக்குமா என்ற அச்சம் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்தது.

Chennai : Gold Rates Decline in Metro Cities

இதற்கிடையே இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4216-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.112 குறைந்து ரூ.33728-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.36856-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 1 கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து ரூ.69.50க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.69,500 ஆக உள்ளது.

மற்ற செய்திகள்