'நோ Lay off... சம்பளமும் Cut இல்ல’... ‘இத்தன கொடுத்தும்... வேறு வேலை தேடும் ஊழியர்கள்'... 'தக்கவைக்கும் முயற்சியில் பிரபல நிறுவனம்!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்பைட் டான்ஸ் நிறுவனம் இந்தியாவில் பணியாற்றும் அதன் ஊழியர்களை தக்க வைக்கும் முயற்சியில் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியா அண்மையில் தடை செய்த 59 சீன செயலிகளில் இந்திய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பைட் டான்ஸ் (Byte Dance) நிறுவனத்தின் டிக் டாக், ஹலோ ஆகிய செயலிகளும் அடக்கம். பைட் டான்ஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள அதன் அலுவலகங்களில் கொரோனா நெருக்கடியில்கூட வேலைக்கு ஊழியர்களை புதிதாக எடுத்துக் கொண்டுதான் இருந்ததாகவும், ஆனால் தற்போது இந்தியா - சீனா இடையிலான பிரச்சனை அதிகரித்த பின் விதிக்கப்பட்ட தடைக்குப் பிறகே இந்தியாவில் ஊழியர்களை புதிதாக வேலைக்கு எடுப்பதை நிறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள மற்ற ஸ்டார்ட் அப் நிறுவங்களான ஓலா, ஸ்விக்கி, சொமேட்டோ போன்றவை கூட கொரோனா நெருக்கடியால் பலரை வேலையில் இருந்து நீக்கியுள்ள நிலையில், பைட் டான்ஸ் தன் ஊழியர்களை இதுவரை லே ஆஃப் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் சுமார் 2,000 பேர் வேலை பார்த்துவரும் நிலையில், அவர்களை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் அந்நிறுவனம் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில், பைட் டான்ஸ் நிறுவனம் ஊழியர்கள் யாரையும் வேலையை விட்டு அனுப்பப்போவதில்லை என அவர்களிடமே கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதில், அந்நிறுவனம் இந்தியாவில் பெரிய பதவிகளில் இருக்கும் ஊழியர்களை மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா போன்ற மற்ற நாட்டு ப்ராஜெக்ட்களுக்கு மாற்றிக் கொண்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் ஊழியர்கள் மத்திய அரசு அனுமதியின்றி எத்தனை நாட்களுக்கு வேலை இல்லாமல் ஊழியர்களுக்கு சம்பளத்தைக் கொடுப்பார்கள் என்ற யோசனையால் வேறு நிறுவனங்களில் வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்