"ரொம்ப மோசமா Feel பண்றேன்" .. எலான் மஸ்க் போட்ட புதிய திட்டம்..நடுங்கிப்போன ஊழியர்கள்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் தனது நிறுவனத்திலிருந்து 10 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

"ரொம்ப மோசமா Feel பண்றேன்" .. எலான் மஸ்க் போட்ட புதிய திட்டம்..நடுங்கிப்போன ஊழியர்கள்..!

Also Read | “நம்பவே முடியல.. நேர்ல வந்த மாதிரியே இருக்கு”.. கல்யாண மண்டபத்தில் நடந்த நெகிழ்ச்சி..!

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியுள்ளார் மஸ்க்.

Businessman Elon Musk Warns Of Tesla Job Cuts

பணிநீக்கம்

உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் நிர்வாகிகளுக்கு அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் நேற்று மின்னஞ்சல் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், பொருளாதாரம் குறித்து மிகுந்த கவலையில் உள்ளதாகவும் அதனால் டெஸ்லாவில் பணியாற்றும் ஊழியர்களில் 10 சதவீதமானோரை பணிநீக்கம் செய்ய இருப்பதாகவும் மேலும் உலகம் முழுவதிலும் இருந்து டெஸ்லா நிறுவனத்திற்கு புதிய ஆட்களை தேர்வு செய்யும் பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார் மஸ்க். இது அந்நிறுவன ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Businessman Elon Musk Warns Of Tesla Job Cuts

மெயில்

கடந்த புதன்கிழமை டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு அனுப்பியதாக சொல்லப்பட்ட மின்னஞ்சல் சமூக வலைதளங்களில் வைரலானது.  அதில்,"வீட்டிலிருந்தே இனி ஊழியர்கள் வேலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. டெஸ்லா ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய விரும்பினால் வாரத்திற்கு குறைந்தது 40 மணிநேரம் டெஸ்லா முதன்மை அலுவலகத்திற்கு வந்து பணிபுரியவேண்டும். இல்லையென்றால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்" என மஸ்க் குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது.

Businessman Elon Musk Warns Of Tesla Job Cuts

இந்நிலையில், பொருளாதார வீழ்ச்சியால் கவலையில் இருப்பதாக கூறியுள்ள மஸ்க், டெஸ்லா நிறுவனத்தை சேர்ந்த 10 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்திருப்பது உலகம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | ‘என்னய்யா ஒரே மர்மமா இருக்கு’.. தானாக பின்னால் வந்த சைக்கிள் ரிக்சா.. திகில் வீடியோ..!

ELON MUSK, BUSINESSMAN ELON MUSK, TESLA, TESLA JOB

மற்ற செய்திகள்