தினமும் ‘3 ஜிபி’ டேட்டா... ‘71 நாட்கள்’ வரை கூடுதல் ‘வேலிடிட்டி’... ‘போட்டி’ போட்டுக்கொண்டு ‘ஆஃபரை’ அறிவிக்கும் பிரபல நிறுவனங்கள்...
முகப்பு > செய்திகள் > வணிகம்பிஎஸ்என்எல் அதன் ஒரு வருட பிளானின் வேலிடிட்டியை 71 நாட்கள் வரை அதிகரித்து புதிய ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.
சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ அதன் ரூ 2020 பிளானை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, ஜியோ எண்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள், ஜியோ அல்லாத எண்களுக்கு 12,000 நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்கும் ரூ 2121 பிளானை அறிமுகம் செய்தது. முன்னதாக இருந்த ரூ 2020 பிளானில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், ரூ 2121 பிளானில் 336 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிஎஸ்என்எல் அதன் ரூ 1999 பிளானுடன் 2 ஆஃபர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆஃபரில் இந்த பிளானுடன் கூடுதலாக 71 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த சலுகை பிப்ரவரி 28 வரை செல்லுபடியாகும் நிலையில், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆஃபரில் ரூ 1999 பிளானுடன் கூடுதலாக 60 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபரின் படி ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 425 நாட்களுக்கு நன்மைகள் கிடைக்கும். இந்த இரண்டாவது ஆஃபரானது மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய சலுகை கேரளாவை தவிர அனைத்து வட்டங்களிலும் கிடைக்கிறது. இந்த ஆஃபரில் தினமும் 3 ஜிபி டேட்டா, இந்தியாவுக்குள் உள்ள எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் 250 நிமிடங்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. அத்துடன் இதில் பிஎஸ்என்எல் டிவி மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சந்தாக்களும் வழங்கப்படுகிறது.