‘100 கோடி சம்பாதிக்குறது சாத்தியம் தான்...’ அதுக்கு பண்ண வேண்டிய விஷயங்கள் என்ன...? அசத்தலான சூப்பர் ஐடியா...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

பிரக்கலா வெல்த் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் இயக்குநரான சொக்கலிங்கம் பழனியப்பன் அவர்கள், மியூச்சுவல் பண்ட் மூலம் ஒரு இளைஞரின் முதிய வயதில் 100 கோடி வரை சம்பாதிக்க முடியும் என்ற ஒரு அசத்தலான ஐடியாவை தெரிவித்துள்ளார்

‘100 கோடி சம்பாதிக்குறது சாத்தியம் தான்...’ அதுக்கு பண்ண வேண்டிய விஷயங்கள் என்ன...? அசத்தலான சூப்பர் ஐடியா...!

பெரும்பான்மையான மக்கள் அனைவருக்கும் அவர்களின் முதல் ஆசையும் கடைசி ஆசையுமாக இருப்பது நாம் நன்றாக சம்பாதித்து, ஓய்வு காலத்தில் கால் மேல் கால் போட்டு நிம்மதியாகவும், சுகமாக வாழவேண்டும் என்றிருக்கும். அதற்கு முதலில் தேவை நல்ல மன அமைதியும் பணமும். மன அமைதி நம்முள் உருவானாலும், பணத்தை நம்மால் உருவாக்க முடியாது. அதனால் நாம் இளம் வயதிலிருந்தே சேமித்தல் அவசியமாகிறது.

சேமிப்பதற்கு நிறைய வழிகள் இருப்பினும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்து லாபம் பெறுவதை குறித்து விளக்கியுள்ளார் பிரக்கலா வெல்த் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் இயக்குநரான சொக்கலிங்கம் பழனியப்பன்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ஒரு 28 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர்  எப்படியும் 32 ஆண்டுகளில் 60 வயதை எட்டி ஓய்வு பெற வாய்ப்புள்ளது. அவர் இந்த 32 ஆண்டுகளில் தான் 100 கோடி சம்பாதிப்பது சாத்தியம் தான்.

அதுமட்டுமில்லாமல் மாதத்துக்கு 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. இதை இரட்டிப்பாக்கி மாதத்துக்கு 4 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அந்த இலக்கை சுலபமாக அடைந்துவிடலாம்.

அதே ஒருவர் மாதம் 4 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் சுமார் 10 சதவீத ரிட்டன் கிடைக்கும் என வைத்துக்கொண்டாலும், அந்த இளைஞரின் 60ஆவது வயதில் வருக்கு ரூ.96.55 கோடி வரையில் கிடைக்கும்.

100 கோடி இலக்கை அடைய விரும்புகிறவர்கள் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் கலவையாக முதலீடு செய்ய வேண்டும். சுமால் கேப் ஃபண்டு மற்றும் மல்ட்டி கேப்களில் அந்த இளைஞர் முதலீடு செய்யலாம். அதுமட்டுமில்லாமல் முதலீடு செய்து லாபம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டுமானால் லார்ஜ் மற்றும் மிட் கேப் ஃபண்டுகளிலும் முதலீடு செய்ய வேண்டும்.

மேலும் தற்போதைய ரூ.23 லட்சம் முதலீட்டுத் தொகை என்பது ரூ.5.57 கோடியாக உயர்ந்தால் மொத்தமாக ஒருவர் 32 ஆண்டுகளில் ரூ.102.12 கோடி வரை சேமிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்