'அக்டோபர் மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகள் விடுமுறை'... விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

அக்டோபர் மாதத்தில் மட்டும் மொத்தம் 11 நாட்கள் வங்கிகள் விடுமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அக்டோபர் மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகள் விடுமுறை'... விவரம் உள்ளே!

அக்டோபர் மாதம் என்றாலே பண்டிகைக் காலம்தான். காந்தி ஜெயந்தி, தீபாவளி மற்றும் பிற தேசிய விடுமுறைகள் காரணமாக, வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய விடுமுறைகள், அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கும் பொருந்தும். இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, விடுமுறை நாட்களில் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறைகளையும் கணக்கில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. 

எனினும், பண்டிகைக் கால விடுமுறை நாட்கள், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்தில் வேறுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநில வாடிக்கையாளர்கள், வங்கிகளின் விடுமுறை நாட்களுக்கு ஏற்ப, தங்களது பண பரிவர்த்தனையை திட்டமிட்டுகொள்வது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. அக்டோபர் 2-ம் தேதி  காந்திஜெயந்தி

2. அக்டோபர் 6-ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை

3. அக்டோபர் 7-ம் தேதி   நவமி (ஆயுத பூஜை)

4. அக்டோபர் 8-ம் தேதி    தசரா (விஜயதசமி)

5. அக்டோபர் 12-ம் தேதி   2-வது சனிக்கிழமை

6. அக்டோபர் 13-ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை

7. அக்டோபர் 20-ம் தேதி   ஞாயிற்றுக்கிழமை

8. அக்டோபர் 26-ம் தேதி   4-வது சனிக்கிழமை

9. அக்டோபர் 27-ம் தேதி   தீபாவளி

10. அக்டோபர் 28-ம் தேதி  கோவர்த்தன பூஜா

11. அக்டோபர் 29-ம் தேதி  பாய் தூஜ்

BANKS, HOLIDAYS, FESTIVAL, SEASON, DIWALI, DEEPAWALI