அடேங்கப்பா! 15% சம்பள உயர்வால்... 'மகிழ்ச்சி'யில் திளைக்கும் 8.5 லட்சம் ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > வணிகம்15% சம்பள உயர்வால் ஊழியர்கள் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
கொரோனா காரணமாக உலகமே முடங்கி கிடக்கிறது. இதனால் தற்போதைய சூழ்நிலையில் வேலையில் இருந்து தூக்காமல் இருந்தாலே போதும் என்ற மனநிலை நீடித்து வருகிறது. பல்வேறு தொழில்களும் குப்புற கிடக்க இயங்கி வரும் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லா விடுமுறை, சம்பளத்தில் பிடித்தம் என பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகின்றன.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் வங்கி ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு வழங்க இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,900 கோடி கூடுதலாக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வால் சுமார் 8.5 லட்சம் வங்கி ஊழியர்கள் பயனடைவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சம்பளம் மற்றும் படி தொகை 15% உயர்த்த ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளது. ஊழியர்களின் திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்குவது பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த நிதியாண்டு முதல் தொடங்குகிறது. ஆனால், தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் விரும்பினால் மட்டுமே இதை வழங்கலாமே தவிர கட்டாயமில்லை.
இந்த புதிய ஒப்பந்தத்தின் விளைவாக தேசிய பென்சன் திட்டத்திற்கு வங்கிகளின் பங்களிப்பு 14% உயரும். இதற்காக கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக சுமார் 35 கட்ட பேச்சுவார்த்தை கூட்டங்கள் இந்திய வங்கிகள் சங்கத்துடன், வங்கி ஊழியர் சங்கங்கள் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்