'போச்சு... ஜாம்பவானுக்கே இந்த நிலையா!?.. இத்தனை பேர கிளம்ப சொல்லிட்டாங்க'!... ஊழியர்களுக்கு 'இடி'யாக விழுந்த அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

பிரபல கார் நிறுவனமான Ford, தனது 5 சதவீத ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கப்போவதாக அறிவித்துள்ளது.

'போச்சு... ஜாம்பவானுக்கே இந்த நிலையா!?.. இத்தனை பேர கிளம்ப சொல்லிட்டாங்க'!... ஊழியர்களுக்கு 'இடி'யாக விழுந்த அறிவிப்பு!

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை ஈடுசெய்ய Ford நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2019ம் ஆண்டின் இறுதியில், ஃபோர்டு நிறுவனத்தில் 1,90,000 ஊழியர்கள் வேலையில் இருந்தனர். அதில் 7,000 பேரை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்ததிருந்தது.

இந்நிலையில், கொரோனாவால் மேலும் 1,400 பணியாளர்களுக்கு வேலை பறிபோக இருக்கிறது. கடந்த 10 வருட காலத்தில், இந்த ஒரு வருடம் முழுவதுமே ஃபோர்டுக்கு நஷ்டமானது தான் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆட்டோமொபைல் துறையில் ஜாம்பவானாகத் திகழும் ஃபோர்டு (Ford) நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்