புத்தாண்டுக்கு அப்புறம் ATM-ல காசு எடுக்கும்போது ‘மறக்காம’ இதை ஞாபகத்துல வச்சிக்கோங்க.. வெளியான அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > வணிகம்புத்தாண்டு முதல் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஏடிஎம்களில் ஒவ்வொரு மாதத்துக்கான பணம் எடுப்பதற்கான அளவைத் தாண்டி பணம் எடுக்கும் போது கட்டணம் வசூலிக்கப்பட்டு வரிகிறது. இந்த சூழலில் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டணங்களை உயர்த்தி கொள்ள அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
ஏடிஎம்களில் இலவசமாக பணம் எடுப்பதற்கான அளவைத் தாண்டும் போது அதற்கான கட்டணம் வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படுகிறது. இது குறித்த தகவல்கள் அந்தந்த வங்கிகள் இருந்து வாடிக்கையாளருக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வாடிக்கையாளரும் கணக்கு வைத்திருக்கும் சம்பந்தப்பட்ட வங்கியின் ஏடிம்-ல் இருந்து 5 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம். அதற்கு அதிகமாக பணம் எடுக்கும்போது சேவை கட்டணமாக 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதுபோலவே ஒவ்வொரு மாதமும் மாநகராட்சி பகுதிகளில் வேறு வங்கியின் ஏடிஎம்களில் 3 முறையும், மாநகராட்சி அல்லாத பகுதிகளில் 5 முறையும் இலவசமாக பணம் எடுக்கலாம். இதற்கு மேல் பணம் எடுத்தால் சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த கட்டணத்தை வரும் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் உயர்த்த வங்கிகள் முடிவு செய்துள்ளன. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட ஏடிஎம் இலவச சேவைக்கு அதிகமாக பணம் எடுக்கும்போது வசூலிக்கப்படும் சேவை கட்டணம் 21 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வரும் புத்தாண்டுக்கு பின் அமலுக்கு வரும் என தெரிகிறது.
மற்ற செய்திகள்