ஏராளமான பேர வேலைய விட்டு தூக்குறாங்க...! 'வேலைவாய்ப்பு பெருகும்னு எதிர்பார்க்கப்பட்ட பிரபல கம்பெனி...' - கலங்கி நிற்கும் ஊழியர்கள்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்வர்த்தக நிறுவனமான அமேசான் டெலிவரி ட்ரோன் திட்டம் மற்றும் பிரைம் ஏர் நிறுவனத்தின் ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவதாக தகவல்கள் பரவிவருகிறது.
ஆன்லைன் நிறுவனமான அமேசான் கொரோனா காலகட்டத்தில் வேலையிழந்த பலருக்கு வேலை அளித்து வந்திருந்தாலும் தற்போது ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கடந்த 2016-ம் ஆண்டு அமேசான் தனது அமெரிக்க பிரைம் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக விமான பார்சல் சேவையை தொடங்கியது. இதன்காரணமாக வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யும் பொருட்கள் விமானம் மூலம் மற்ற நகரங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இதற்காக முதல் முறையாக தன்னுடைய பெயரில் கார்கோ விமானத்தை நிறுவனம் முதல் முறை அறிமுகம் செய்த புகழுக்கு சொந்தமாக மாறியது.
அதுமட்டுமில்லாமல் கடந்த 2019-ம் ஆண்டு ட்ரோன்கள் எனப்படும் சிறிய ரக விமானங்கள் மூலம் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யும் திட்டத்துக்கும் அனுமதி பெற்றது. இந்நிலையில் டெலிவெரி ட்ரோன் திட்டம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
இந்த தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக வரவில்லை என்றாலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் உள்ளவர்கள் வேலையிழப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்