மொத்தம் '20 ஆயிரம்' காலிப்பணியிடங்கள்... 12-வது படிச்சிருந்தா போதும்... 'பிரபல' நிறுவனம் அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > வணிகம்மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் 20 ஆயிரம் ஊழியர்களை தற்காலிகமாக வேலைக்கு எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதை சமாளிக்கும் பொருட்டு இந்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
ஹைதராபாத், கோயம்புத்தூர், புனே, நொய்டா, கொல்கத்தா, ஜெய்ப்பூர், சண்டிகர், மங்களூர், இந்தோர், போபால் மற்றும் லக்னோ ஆகிய இந்திய நகரங்களில் வாடிக்கையாளர் தேவையினை பூர்த்தி செய்ய தற்காலிக பணியாளர்கள் நிரப்பப்பட இருக்கின்றனர். அமேசானின் 'மெய்நிகர் வாடிக்கையாளர் சேவை' (Virtual Customer Service) திட்டத்தின் ஒரு பகுதியாக பெரும்பாலான பதவிகள் உள்ளன. இது ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவிக்கிறது.
இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 12-வது தேர்ச்சி போதும் என்றும் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சரளமாக பேசத்தெரிய வேண்டும் எனவும் அமேசான் தெரிவித்துள்ளது. ஊழியர்கள் வேலை செய்வதை பொறுத்து குறிப்பிட்ட சதவீத ஊழியர்கள் இந்தாண்டுக்குள் பணி நிரந்தரம் செய்யப்படும் எனவும் அமேசான் இந்தியா தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்