ஒரே நாளில் '49 ஆயிரம்' கோடி அவுட்.. உலகின் 'நம்பர் 1' பணக்காரர்.. அந்தஸ்தை இழந்த 'அமேசான்' ஓனர்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவால் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்தை அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இழந்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க பங்குச்சந்தையில் அமேசானின் பங்குகள் 7% சரிந்தது. இதன் மூலம் சுமார் 49 ஆயிரம் கோடி நஷ்டம் அமேசானுக்கு ஏற்பட்டது.

ஒரே நாளில் '49 ஆயிரம்' கோடி அவுட்.. உலகின் 'நம்பர் 1' பணக்காரர்.. அந்தஸ்தை இழந்த 'அமேசான்' ஓனர்!

இதைத்தொடர்ந்து தனது நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தை பில் கேட்ஸிடம் ஜெப் பெசோஸ் இழந்தார். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 105.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். ஜெப் பெசோஸ் வைத்துள்ள சொத்தின் இந்திய மதிப்பு சுமார் 7லட்சத்து 37 ஆயிரத்து 71 கோடி ரூபாய் ஆகும் . பில்கேட்ஸின் சொத்துமதிப்பு 7லட்சத்து 49 ஆயிரத்து 801 கோடியாக உள்ளது.