அடுத்த வருஷம் வரைக்கும் 'ஜாலியா',,.. 'வீட்ல' இருந்தே 'வேலை'ய பாருங்க,,.. 'அதிரடி' அறிவிப்பு வெளியிட்ட முன்னணி 'நிறுவனம்'!!!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், பல முன்னணி நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியின் காரணமாக, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அடுத்த வருஷம் வரைக்கும் 'ஜாலியா',,.. 'வீட்ல' இருந்தே 'வேலை'ய பாருங்க,,.. 'அதிரடி' அறிவிப்பு வெளியிட்ட முன்னணி 'நிறுவனம்'!!!

ஆயிரக்கணக்கான ஊழியர்களை சில நிறுவனங்கள் பணியை விட்டு தூக்கியுள்ள நிலையில், மற்ற சில நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணிபுரியாவும் ஊழியர்களை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஆன்லைனில் விடுதிகளை பதிவு செய்து கொடுக்கும் முன்னணி நிறுவனமான ஏர்பிஎன்பி, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தி வருகிறது.

அத்துடன், ஊழியர்களின் மாத சம்பளத்துடன் 500 டாலர்களையும் சேர்த்து வழங்கவுள்ளது. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிவதால் அலுவலக உபகரணங்கள் மற்றும் பணிக்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொள்ள வேண்டி இந்த முடிவை எடுத்துள்ளது.

'கொரோனா தொற்று எப்போது முடிவடையும் என்பது சரிவர தெரியாததால், எங்களது ஊழியர்கள் சிறந்த முறையில் எந்தவித குழப்பமும் இல்லாமல் பணிபுரிய இந்த முடிவை எடுத்துள்ளோம்' என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'அதே போல வரும் ஆண்டுகளில் எங்களது ஊழியர்கள் சிறந்த முறையில் திட்டமிட வேண்டும் எனவும், இத்தகைய சூழ்நிலைகளில் தங்களின் குடும்பத்தினருடன் தங்களது நேரத்தை செலவழித்துக் கொள்ளவும், தங்களின் தனிப்பட்ட முடிவுகளை எடுக்க வாய்ப்பாக அமையும்' என நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

மற்ற செய்திகள்