'ஊழியர்களுக்கு டபுள் டமாக்கா'... 'சம்பள உயர்வை அதிரடியாக அறிவித்த டிசிஎஸ்'... அதே பாணியில் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனங்கள்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

2021 ஏப்ரல் மாதம் முதல் ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

'ஊழியர்களுக்கு டபுள் டமாக்கா'... 'சம்பள உயர்வை அதிரடியாக அறிவித்த டிசிஎஸ்'... அதே பாணியில் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனங்கள்!

கடந்த ஆண்டு பலருக்கும் மிகவும் ஒரு கசப்பான ஆண்டாகவே கடந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கொரோனா, அதனால் வந்த பொது முடக்கம், கடுமையான பொருளாதார சரிவு, நிறுவனங்களின் ஆட்குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு எனப் பலரும் ஒரு வழி ஆகிவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

கொரோனா பாதிப்பால் அனைத்து துறைகளிலும் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதால் சம்பள உயர்வு, ஊக்கத்தொகை போன்ற சலுகைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு வரும் என ஆசையுடன் காத்திருந்த பலரின் கனவுகளும் நொறுங்கிப் போனது. இந்நிலையில் 2021ஆம் ஆண்டு தொடக்கம் சற்று மகிழ்ச்சியான ஒன்றாகவே அமைந்தது.

After TCS, other Tata group firms to restore salaries

அந்த வகையில் 2021-22 நிதியாண்டின் முதல் சம்பள உயர்வை டிசிஎஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. வருகிற ஏப்ரல் மாதம் முதல் இந்த சம்பள உயர்வு அமலுக்கு வரும் என இந்நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாகச் சம்பள உயர்வை அறிவித்துள்ளதால் அதன் ஊழியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு காரணமாக மற்ற நிறுவனங்களும் சம்பள உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் டாடா குழுமத்தின் மற்ற நிறுவனங்களும் சம்பள உயர்வை தற்போது அறிவித்துள்ளது.

After TCS, other Tata group firms to restore salaries

கொரோனா காரணமாக டாடா குழும நிறுவனங்கள் 20 சதவீத அளவுக்குச் சம்பளத்தில் பிடித்தம் செய்திருந்தது. தற்போது நிலைமை ஓரளவிற்குச் சரி ஆகி வரும் நிலையில், டாடா குழுமத்தின் 'TataCapital, Tata Consumer, Titan, Tata Motors, Tata Power, Tata Steel, Tata Chemicals, Voltas, Trent' போன்ற நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்