ஆனந்த் மஹிந்திராவுக்கு இப்படியொரு அட்வைஸ் கொடுத்துப்புட்டாரே ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு!
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்தன் வித்தியாசமான செயல்களுக்காக மிகவும் பிரபலமானவர் மென்பொருள் நிறுவனமான ஜோஹோவின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. அவர் தற்போது மஹிந்திரா கார் தயாரிப்பு நிறுவனத்தின் ஆனந்த் மஹிந்திராவுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஸ்ரீதர், சில நாட்களுக்கு முனர் மஹிந்திரா நிறுவனத்தின் எலக்டிரிக் ஆட்டோவான டிரியோவை வாங்கியுள்ளார். அதை அவர் தொடர்ந்து பயன்படுத்தி மஹிந்திரா நிறுவனத்திற்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், வண்டியில் இன்னும் என்ன என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்தும் ஒரு பட்டியல் தந்துள்ளார். இவை அனைத்தையும் ஸ்ரீதர், ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் ட்விட்டரில் மஹிந்திரா நிறுவன புதிய எலக்டிரிக் ஆட்டோ குறித்து கூறியிருப்பதாவது, ‘இந்த மின்சார வாகனம், விலையைப் பொறுத்த வரையிலும், பயன்பாட்டைப் பொறுத்த வரையிலும் குடும்பங்களுக்கு மிகவும் ஏற்ற வகையில் இருக்கும். இதன் விலை 3.5 லட்ச ரூபாய் ஆகும். இன்னும் அதிக எண்ணிக்கையில் இந்த வாகனம் விற்பனை ஆகும் பட்சத்தில் இதன் விலை இன்னமும் குறைவாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இதன் வடிவமைப்பு கச்சிதமாக இருப்பதால், இது பலருக்குப் பிடித்த வாகனமாக மாறக்கூடும். நான், என் கிராம சாலைகளில் இந்த ஆட்டோவை ஓட்டிச் செல்லும் போது, பலரும் இதை கவனிக்கிறார்கள். இதைப் போன்ற ஒரு வாகனத்தை எங்கு வாங்குவது என்றும் கேட்கிறார்கள்.
எனவே, இந்த ஆட்டோ இன்னும் நிறைய வண்ணங்களிலும், பல்வேறு டிசைன்களிலும் வர வேண்டும் என்பது எனது விருப்பம். அதேபோல குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் இன்னும் சில ஆப்ஷன்களைக் கொடுக்கலாம். இந்த மிகவும் விலை குறைவான மின்சார வாகனத்தைப் பிரபலப்படுத்த மிகவும் வித்தியாசமான மார்க்கெட்டிங் திட்டம் அவசியம் என்று கருதுகிறேன்.
இது பிரபலமடைய மிகப் பெரிய வாய்ப்பு இருப்பதாக பார்க்கிறேன். இந்த வாகனத்தை ஓட்டுவதை நான் மிகவும் விருபுகிறேன்’ என்று புகழாரம் சூட்டி, தன் அளவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றியும் பட்டியலிட்டுக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்