'இனிமேல் இந்த மாடல் போன்களில் எல்லாம்...' 'வாட்ஸ் அப் யூஸ் பண்ண முடியாது...' - கடும் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...!

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்
By |

வாட்ஸ் அப் அப்ளிகேஷன் இனி குறிப்பிட்ட சில மாடல் மொபைல் போன்களில் இயங்காது என அறிவித்து பல வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது அந்நிறுவனம்.

'இனிமேல் இந்த மாடல் போன்களில் எல்லாம்...' 'வாட்ஸ் அப் யூஸ் பண்ண முடியாது...' - கடும் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...!

இன்றைய சூழலில் வாட்ஸ் அப் அனைவரும் உபயோகபடுத்தும் ஒரு அப்ளிகேஷனாக மாறிவிட்டது எனலாம். நண்பர்கள் முதல் அலுவலக செயல்பாடுகள் வரை எல்லாமே அதன் மூலம் பகிரப்படுகிறது. இந்நிலையில் 2021-ம் ஆண்டு முதல் வாட்ஸ் அப் செயலி சில குறிப்பிட்ட செல்போன்களில் வேலை செய்யாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஐஓஎஸ்-9 மற்றும் ஆண்ட்ராய்டு 4.0.3 ஆகியவற்றுக்கு குறைவான இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் செயலி இனி இயங்காது எனவும், இதனால் இந்த இயங்கு தளங்களைக் கொண்ட ஸ்மார்ட் பயனாளர்கள் உடனே அப்டேட் செய்ய வேண்டும் என இல்லையேல் இயங்காது என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஐபோன் 4S, 5, 5S, 6, 6S போன்ற மாடல்களில் வாட்ஸ் அப் இயங்காது.

இந்த அறிவிப்பு குறிப்பிட்ட செல்போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.

மற்ற செய்திகள்