இனிமேல் கொரோனா எப்படி உள்ள வருதுன்னு பார்க்கலாம்...! - 'சேஃப்டி பப்பிள்ஸ்' டெக்னாலஜியை அறிமுகப்படுத்திய பிரபல கார் நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்பிரபல கார் நிறுவனமான டாட்டா கொரோனா முன்னெச்சரிக்கையாக காற்று நிரப்பப்பட்ட ஒரு பெரிய பிளாஸ்டிக் பைக்குள் முற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட புதிய கார்களை விற்பனைக்கு வழங்கபோவதாக அறிவித்துள்ளது.
சமீபகாலமாகவே ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் வீழ்ச்சி நிலையில் இருந்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது எனலாம். தற்போது அனைத்து நிறுவனங்களும் தங்களை மீட்டெடுக்கும் நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தங்களின் அப்டேட்டை கொடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தற்போது கொரோனா பரவல் பாதுகாப்பு நடவடிக்கைகளில், அதன் கார்களில் 'சேஃப்டி பப்பிள்ஸ் (Safety Bubbles)' என்ற ஒன்றை பயன்படுத்துகின்றனர். பாக்டீரியா மற்றும் வைரஸ்களிலிருந்து காரைக் காப்பதற்கான கூடுதல் அம்சமாகும். புதிய அம்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட காரின் படங்கள் மற்றும் வீடியோ கிளிப்களை மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பகிர்ந்து கொண்டது.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் கார் தயாரிப்பாளர் தங்களது வாடிக்கையாளர்களுக்காக காற்று சுத்திகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை நெக்சான் மற்றும் ஹாரியர் மாடல்களில் காணலாம். அதுமட்டுமில்லாமல் கை சுத்திகரிப்பு, என் 95 தர முகக்கவசங்கள், கையுறைகள், பாதுகாப்பு தொடு விசை, பேப்பர் டிஸ்ஸு பாக்ஸ் மற்றும் மிஸ்ட் டிஃப்பியூசர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
மற்ற செய்திகள்