'புதுசா ராயல் என்பீல்டு பைக் வாங்குனீங்களா'?... 'அப்போ உங்க பைக்கிலும் இந்த பிரச்சனை இருக்கலாம்'... 2.37 லட்சம் Bikeகளை திரும்ப பெற முடிவு!
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்இந்தியா உட்பட 7 நாடுகளில் விற்கப்பட்ட சுமார் 2.37 லட்சம் பைக்குக்களை திரும்பப்பெற ராயல் என்பீல்டு முடிவு செய்துள்ளது.
தலைமுறை கடந்து ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு அதன் வாடிக்கையாளர்களுக்குச் சற்று அதிர்ச்சியைக் கொடுக்கலாம்.
அதாவது ராயல் என்பீல்டின் மெட்டியோர் 350, கிளாசிக் 30 மற்றும் புல்லட் 350 உள்ளிட்ட பைக்குகளை திரும்பப்பெற அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது 'இக்னிஷன் காயிலில்' (Ignition Coil) கண்டுபிடிக்கப்பட்ட பெரிய குறைபாடு தான். கடந்த டிசம்பர் மாதம் முதல் கடந்த மாதத்திற்கு இடையே விற்கப்பட்ட 'மெட்டியோர் 350, கிளாசிக் 30 மற்றும் புல்லட் 350' ஆகிய வண்டிகளில் வழக்கமான சோதனையின்போது இது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைச் சரி செய்யத் தவறும் பட்சத்தில், வண்டியில் எஞ்சின் தகராறு, பைக்கின் திறன் குறைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதேநேரத்தில் சில நேரம் எலெக்ட்ரிக் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது. எனவே இந்த பைக்குகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிட்ட குறைபாடு சரி செய்யப்பட்டு மீண்டும் வாடிக்கையாளர்களிடம் கொடுக்கப்படும் என ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே 2020 டிசம்பரில் இருந்து 2021 ஏப்ரல் வரையில் தயாரிக்கப்பட்ட மெட்டியோர் 350 பைக்குகளும், 2021 ஜனவரியிலிருந்து 2021 ஏப்ரல் வரையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கிளாசிக் 350 & புல்லட் 350 பைக்குகள் மட்டுமே திரும்ப அழைக்கப்படுகின்றன. இந்த பிரச்சனை மேற்கூறப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் மிகவும் அரிதாகவே ஏற்படுவதால், மேற்கூறப்பட்ட காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட பைக்குகள் அனைத்திலும் இக்னிஷன் காயிலில் பிரச்சனை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை எனவும் ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் வாகன அடையாள எண்ணை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளர்கள் டீலர்களை தொடர்புகொண்டு இந்த பிரச்சனையைச் சரி செய்து கொள்ளலாம் என ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்