முகேஷ் அம்பானி வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார்.. இந்தியாவின் விலையுயர்ந்த கார்களில் ஒன்று.. எத்தனை கோடி தெரியுமா?

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்
By |

இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி சொகுசு கார்களை வாங்கி குவிப்பதிலும் இவர் ஆர்வமிக்கவர்.. ஜியோ கேரேஜ் எனப்படும் அம்பானியின் கார் சேமிப்பிடத்தில் பல லக்சரி கார்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது மற்றுமொரு லக்சரி காரை அம்பானி வாங்கியுள்ளார்.

முகேஷ் அம்பானி வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார்.. இந்தியாவின் விலையுயர்ந்த கார்களில் ஒன்று.. எத்தனை கோடி தெரியுமா?

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி:

இந்த வகையில் இவரது ஜியோ கேரேஜில் சமீபத்தில் இணைத்திருக்கும் லக்சரி கார் ரோல்ஸ் ராயல்ஸ் எஸ்யூவி ஆகும். முகேஷ் அம்பானியின் இந்த புதிய எஸ்யூவி கார் தொடர்பாக ஒரே ஒரு படம் மட்டுமே இணையத்தில் வெளியாகியுள்ளது.  இந்திய சந்தையில் ரோல்ஸ் ராயல்ஸ் நிறுவனம் அதன் எஸ்யூவி காரினை அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்வது இல்லை. ஆதலால் இதனை முகேஷ் அம்பானி தனிப்பட்ட முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளார். வெளிநாடுகளில் பெரும் பணக்காரர்கள் இந்த  காரினை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த காரின் விலை என்ன?

எஸ்யூவி காரில் 6.2 லிட்டர் வி8 என்ஜினை காடிலாக் நிறுவனம் பொருத்துகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 420 பிஎச்பி மற்றும் 624 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அம்பானியின் கேரேஜில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 காரும் உள்ளது. லேண்ட் ரோவர் டிஃபெண்டரின் ஐந்து-இருக்கை வெர்சனாக 110 விளங்குகிறது. வெளிநாட்டு சந்தைகளில் சூப்பர்சார்ஜ்டு வி8 என்ஜின் தேர்விலும் இந்த ஆற்றல்மிக்க எஸ்யூவி விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரின் விலை இந்திய மதிப்பின்படி கிட்டத்தட்ட 13 கோடி ஆகும்.

அம்பானியின் கேரேஜில் இரண்டு பெண்டைகா கார்கள்:

கடந்த 2021-ஆம் ஆண்டில் இரு லெக்ஸஸ் எல்.எக்ஸ்570 எஸ்யூவி கார்களையும் முகேஷ் அம்பானி தனது கேரஜில் சேர்த்திருந்தார். இதில் ஒன்று சில்வர் நிறத்திலும், மற்றொன்று வெள்ளை நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டிருந்தது. உலகளவில் பிரபலமான லெக்ஸஸ் பிராண்டின் முதன்மையான எஸ்யூவி மாடலாக விளங்கும் எல்.எக்ஸ்570 -இல் 5.7 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. இது 362 பிஎச்பி மற்றும் 530 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அம்பானியின் கேரேஜில் இரண்டு பெண்டைகா கார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

MUKESH AMBANI, ROLLS ROYCE, SUV, CAR, முகேஷ் அம்பானி, ரோல்ஸ் ராய்ஸ்

மற்ற செய்திகள்