'கார் விற்பனை வீழ்ச்சியால்'... 'பிரபல கார் நிறுவனம்'... 'எடுத்த அதிரடி முடிவு'!

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்
By |

கார் விற்பனை குறைந்ததால் 2 நாட்களுக்கு, கார் உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்படுவதாக மாருதி சுசுகி இந்திய நிறுவனம் அறிவித்து உள்ளது.

'கார் விற்பனை வீழ்ச்சியால்'... 'பிரபல கார் நிறுவனம்'... 'எடுத்த அதிரடி முடிவு'!

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனம் மாருதி சுசுகி. ஏற்றுமதி, உள்நாட்டு விற்பனை என அனைத்திலும், அந்த நிறுவனம் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, ஆட்டோ மொபைல் துறையில் நிலவும் மந்த நிலை காரணமாக, அனைத்து நிறுவனங்களின் கார் விற்பனையும் கணிசமாக சரிந்துள்ளது.

மாருதி சுசுகி நிறுவனமும் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுசுகி நிறுவன கார்களின் விற்பனை 33 சதவிகித விழுக்காடு அளவுக்கு சரிந்தது. இதன் காரணமாக உற்பத்தியைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ள அந்த நிறுவனம், முதற்கட்டமாக அரியானாவில் உள்ள இரு ஆலைகளில் இரு நாட்களுக்கு உற்பத்தியை முற்றிலும் நிறுத்த முடிவு செய்துள்ளது.

அதன்படி, குருகிராம் மற்றும் மானேசர் ஆகிய இடங்களில் உள்ள ஆலைகளில் செப்டம்பர் 7 மற்றும் 9 ஆகிய தேதிகளை உற்பத்தியில்லா நாட்களாக கடைப்பிடிக்க உள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது. அன்றைய தினங்களுக்கு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தில் 1,68,725 வாகனங்களை மாருதி சுசுகி உற்பத்தி செய்திருந்தது. ஆனால், 2019 ஆகஸ்ட்டில் 1,11,370 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பேசஞ்சர் ரக வாகன உற்பத்தியும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாகவே அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மினி மற்றும் காம்பேக்ட் ரக கார்களின் உற்பத்தியும் சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

MARUTISUZUKI, AUTOMOBILE, INDUSTRY