'இந்த மாதிரி கார் வாங்குறவங்களுக்கு...' 'ரூ.1.50 லட்சம் ஊக்கத்தொகை கொடுப்போம்...' - மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மாநிலம்...!
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்குஜராத்தில் பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், கார்களை வாங்குவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.
இன்றைய சூழலில் பெட்ரோல் அல்லது டீசல் போட்டு வாகனங்களை ஓட்டுவது மலையை கயிறு கட்டி இழுப்பதற்கு சமமாக இருக்கிறது.
அதோடு தற்போது பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், கார்கள் வாங்குவோரின் எண்ணிக்கையும் சற்று அதிகரித்து வருகிறது. இது போகப்போக இன்னும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
இதன்காரணமாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான புதிய கொள்கையை குஜராத் அரசு அறிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், அடுத்த நான்கு ஆண்டுகளில் இரண்டு லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஊக்கதொகை வழங்குவதற்காக 870 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.20,000 மற்றும் கார்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரையும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது.
மேலும், சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கு 25 சதவீதம் வரை 10 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்