சென்னை OMR-லயோ, ECR-லயோ ஈஸியாக போகலாம்.. ரோட்ல போன கார்.‌. றெக்கைய விரிச்சா விமானம்.. செம்ம நியூஸ்..!

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்
By |

AirCar என்ற பறக்கும் காருக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவாகியா ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை OMR-லயோ, ECR-லயோ ஈஸியாக போகலாம்.. ரோட்ல போன கார்.‌. றெக்கைய விரிச்சா விமானம்.. செம்ம நியூஸ்..!

பறக்கும் கார்

Klein Vision என்ற நிறுவனம் பறக்கும் வகையில் உள்ள AirCar-ஐ வடிவமைத்துள்ளது. சாலையில் செல்லும்போது சாதாரண காராகவும், இறக்கையை விரித்தால் மூன்றே நிமிடங்களில் பறக்கும் விமானமாக மாறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 2 பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார் EASA எனப்படும் ஐரோப்பிய விமான போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனத்தின் சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளது.

AirCar craft received certificate of Airworthiness by Slovakia

BMW என்ஜின்

சுமார் 70 மணிநேரத்திற்கும் மேலான பறக்கும் சோதனை மற்றும் 200 முறை தரை இறங்குதல் மற்றும் டேக் ஆப் சோதனைகளை இந்த கார் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 1000 கிலோ எடை கொண்ட இந்த காரில், 15 கிலோ வாட் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 1.6 லிட்டர் சாதாரண பிஎம்டபிள்யூ என்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது.

‘ஸ்பாட் பிக்சிங்’ செய்ய சொல்லி மிரட்டுனாரு.. இந்திய தொழிலதிபர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த கிரிக்கெட் வீரர்..!

AirCar craft received certificate of Airworthiness by Slovakia

சென்னை டிராபிக்

இந்த கார் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில், 1000 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக் கூடியது என்று Klein Vision நிறுவனம் தெரிவித்துள்ளது. சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை கார் தமிழ்நாட்டில் விற்பனைக்கு வந்தால், சென்னை போக்குவரத்து நெரிசலை ஈசியாக கடந்துவிடலாம் என நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

AIRCAR CRAFT, AIRWORTHINESS, SLOVAKIA, TRANSPORT AUTHORITY, KLEIN VISION, BMW என்ஜின், பறக்கும் கார்

மற்ற செய்திகள்