இந்தியால 7 லட்சம் பேர் 'கார்' புக் பண்ணிட்டு டெலிவரிக்கு வெயிட் பன்றாங்க...! - என்ன காரணம்...?
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்இந்தியாவில் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களுடைய புதிய கார்களின் வருகைக்காக காத்திருப்பதாக அதிர்ச்சிக்கர தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கார் வாங்கும் உரிமையாளர்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கள் கார்களின் வருகைக்காக வரிசையில் காத்திருக்கிறார்களாம். புதிய கார்களை புக்கிங் செய்வோருக்கு இந்த வெயிட்டிங் பீரியட் (Waiting Period) இன்னும் நீண்டதாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
இதற்கு காரணம் கார்களில் பயன்படுத்தப்படும் செமிகண்டக்டர் தான். கார்களின் மிக சிறப்பான எலெக்ட்ரானிக் பார்ட்டான செமிகண்டக்டர் சிப்ஸ்களுக்கு (மைக்ரோசிப் ஷார்டேஜ்) நிலவி வரும் பற்றாக்குறையால், கார் நிறுவனங்களால் முழு திறனில் கார்களை உற்பத்தி செய்ய முடியவில்லை.
இதனால் நாட்டில் உள்ள 7 லட்சத்துக்கும் மேற்பட்ட கார் வாங்குவோர் புக் செய்த புதிய கார் தங்கள் வீட்டிற்கு எப்போது வரும் என காத்திருக்கின்றனர். பல பிரபல நிறுவனங்கள் புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இருந்தாலும், கார் நிறுவனங்களால் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் கார்களை டெலிவரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
அதோடு, டெலிவரி நேரத்தில் பொருந்தக்கூடிய கட்டணங்கள் (applicable prices) செலுத்தப்பட வேண்டியிருப்பதால், வாங்குவோர் தங்கள் வாகனத்திற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். கார் நிறுவனங்களுக்கு உள்ளீடு செலவுகள் (Inputs costs) அதிகரித்து வருகின்றன.
தற்போது வரை மஹிந்திரா எக்ஸ்யூவி 700, மாருதி, ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஆஸ்டர், டாடா பஞ்ச், மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் மற்றும் ஆடி எட்ரான் எலக்ட்ரிக் ஆகியவற்றின் சிஎன்ஜி வகைகள் இந்த வெயிட்டிங் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி அதிக காத்திருப்பு பட்டியலில் (சுமார் 2.15 லட்சம் வெயிட்டர்ஸ்) முதலிடத்தில் உள்ளது. அதன் பின் ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகியவை தங்களது டாப் மாடல்களுக்கு தலா ஒரு லட்சம் பேக்லாக் வைத்துள்ளன.
மாருதி சுசூகி இந்தியாவின் சிஇஓ கெனிச்சி அயுகாவா வெயிட்டிங் பீரியட் அதிகரித்து கொண்டே செல்வதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் ஆட்டோ மொபைல்ஸ் துறை கார் விற்கவில்லை என்று புலம்பிகொண்டிருந்த நிலையில் இப்போது கார் வாங்கியவர்கள் கார் வரவில்லை என புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
மற்ற செய்திகள்