ZOMATO ஊழியர் மீது குற்றச்சாட்டு, உணவு ஆர்டர் செய்த பெண் மீது பரபரப்பு நடவடிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மேக்கப் தொழில் செய்யும் பெண்ணான பெங்களூரைச் சேர்ந்த ஹிதேஷா சந்திரனி (28) தாம் ஆர்டர் செய்த உணவு தாமதமானதால் ஊழியருடன் நடந்த தாக்குதல் சம்பவம் பற்றி கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதனை அடுத்து அனைவரும் ஹிதேஷாவுக்கு ஆதரவாக பேசிவந்த நிலையில், ஊழியரின் தரப்பு என்ன என்பது குறித்த தகவல் வெளிவராமல் இருந்தது. இதனிடையே ஹிதேஷா தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, ஜொமாட்டோ டெலிவரி ஊழியர் காமராஜ் விசாரிக்கப்பட்டார்.

காமராஜ் இதுபற்றி பேசியபோது, உண்மையில் என்ன நடந்தது, அந்த பெண்ணுக்கும் தனக்கும் என்ன நடந்தது என்பது பற்றி முழுமையாகக் கூறியதுடன், தனது குடும்ப சூழ்நிலை பற்றி பேசினார். மேலும் தனக்கு இந்த வேலை எவ்வளவு முக்கியம் என்றும் கண்ணீர் மல்க விளக்கினார். இதனிடையே பிரபல பாலிவுட் நடிகை  பரினீத்தி சோப்ரா காமராஜை உண்மையானவர் என தான் நம்புவதாகவும் அப்படி இருப்பின் அந்த பெண்ணை விசாரித்து,  அப்பெண் மீது தவறு இருப்பின் அவரை தண்டிக்க வேண்டும் என்று கூறினார்.

ALSO READ: "அந்த பொண்ணு சொல்றது பொய்!" .. ZOMATO BOY கண்ணீர் VIDEO.. இளம் நடிகை ஆதரவு!

இந்நிலையில் ஜொமாட்டோ டெலிவரி ஊழியர் காமராஜ் அளித்த புகாரின் பெயரில் ஹிதேஷா சந்திரனி மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஹிதேஷாவின் வீடியோவில் உணவு டெலிவரி செய்ய வந்த காமராஜ் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டியிருந்ததைத் தொடர்ந்து, அப்பெண் நாடகமாடுவதாக காமராஜ் அளித்துள்ள புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Zomato Delivery Boy complaints on Hitesha chandranee

People looking for online information on HiteshaChandranee, ZomatoDeliveryGuy will find this news story useful.