செம்ம்ம்ம.. சூப்பர்ப்பா.!! நிச்சயதார்த்தம் செய்துகொண்ட இளம் தமிழ் சீரியல் ஜோடி! #TRENDING

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தமிழ் சீரியல் நடிகை நடிகரும், தனது காதலருமானவரை கரம் பிடித்தார். ஆம், சீரியல் நடிகை அபி நவ்யா, தான் காதலித்து வந்த தீபக் குமாருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

பிரபல சீரியல் நடிகர் தீபக் குமாருடன் டேட்டிங் செய்து வந்த அபி நவ்யா, இவர்களின் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அதன்படி, தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ, இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

நடிகர் தீபக் சில குறும்படங்களில் நடித்துள்ளதுடன், ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை சீரியலில் நடித்து வருகிறார். நடிகை அபி நவ்யா தொடக்கத்தில் செய்தி வாசிப்பாளராக வலம் வந்தாலும் பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சித்திரம் பேசுதடி தொடரில் நடிக்கத் தொடங்கினார். 

இந்நிலையில்தான் இவர்களின் திருமண நிச்சயதார்த்த நிகழ்வின் வீடியோவை தங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்த அபி, தங்கள் வாழ்வில் இது மறக்க முடியாத தருணம் என்றும் உயிருள்ள வரை ஒருவருக்கொருவர் மூச்சாய் இருப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதே வீடியோவை பகிர்ந்துள்ள தீபக், “இந்தத் தருணம் எங்கள் நிச்சயதார்த்தம். இன்னும் என்னால் இதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை ...

என்னைச் சுற்றியுள்ள அன்பு மற்றும் மகிழ்ச்சியாலும், குறிப்பாக அவளாலும் சிலிர்த்துவிட்டேன் ... உன்னை எப்போதும் காதலிக்கிறேன் ... அபி நவ்யா ” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read: சூர்யா தயாரிப்பில் பிக்பாஸ் நாயகி நடிக்கும் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு! வெளியான டிரைலர்!

தொடர்புடைய இணைப்புகள்

Zeetamil serial actors engagement viral pics சீரியல் நடிகர்கள்

People looking for online information on Actor, Marraiage, Serial, SerialActress, Trending, Wedding will find this news story useful.