அதிர்ச்சி!!.. "சோகத்தில் பிரபல சீரியல் ரசிகர்கள்!".. எழுத்தாளரை அடுத்து தயாரிப்பாளர் மரணம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியலின் முக்கிய பிரபலம் மரணம் அடைந்துள்ளதை அடுத்து சின்னத்திரை உலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Zee Tamil Serial producer passes away following writer

ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறைய ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. குறிப்பிட்டு சொல்லக்கூடிய சீரியல்களாக செம்பருத்தி, யாரடி நீ மோகினி, கோகுலத்தின் சீதை என நிறைய சீரியல்கள் இந்த சேனலின் மூலம் மக்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன. 

இந்த வரிசையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஹிட் சீரியலாக ஓடும் முதன்மையான தொடர்களுள் ஒன்றுதான் சத்யா. இந்த சீரியலில் தான் தற்போது அந்த பெரும் சோகம் ஏற்பட்டு அனைவரையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஆம், சத்யா சீரியலின் தயாரிப்பாளர் ஆர்.கே மனோகர் தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தி சத்யா சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதே சீரியலில் பணிபுரிந்த எழுத்தாளர் லோபர் சாமி நான்கைந்து மாதங்களுக்கு முன்புதான் உயிரிழந்தார்.இதனை அடுத்து இந்த சீரியல் ரசிகர்களுக்கு அடுத்த சோக நிகழ்வாக, இந்த சீரியலின் தயாரிப்பாளரும் மரணம் அடைந்துள்ளார்.

Also Read: பெரும் சோகம்!!! 9 முறை மூளை அறுவை சிகிச்சை செய்த பிரபல சீரியல் நடிகை திடீர் மரணம்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Zee Tamil Serial producer passes away following writer

People looking for online information on சத்யா சீரியல், ஜீ தமிழ், டிவி சீரியல் சத்யா, SatyaSerial, Serial, Trending, TVSerial, TVShow, ZeeTamil, ZeeTamilSathya, ZeeTV will find this news story useful.