டிவி 'சீரியலா' இல்லை ஷங்கர் படமா? வேற லெவலில் 'பிரம்மாண்ட' புரொபோஸல்!..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். 

அதிலும் காதல், ரொமான்ஸ் என சீரியல்களில் ஒளிபரப்பாகும் காட்சிகள் இணையத்தில் மீண்டும் மீண்டும் வைரலாக பகிரப்படுவன. அந்த வகையில் ஜீ தமிழ் சீரியல்களுள் முக்கியமான சீரியல் நீதானே எந்தன் பொன்வசந்தம்.

பிரபல திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்கும் இந்த சீரியலில் தற்போது தான் அவர் நாயகியை புரோபோஸ் செய்யும் கட்டம் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று ஒளிபரப்பான எபிசோடில் ஜெய் ஆகாஷ், நாயகிக்கு புரொபோஸ் செய்துள்ளார். 

அதுவும் எப்படி என்றால், நாயகியை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று ஆச்சர்யப்படுத்தினார். நாயகி முதல் முறையாக, தான் ஹெலிகாப்டரை அருகில் இருந்து பார்ப்பதாக சொல்கிறார். ஆனால் நாயகனோ பார்த்தால் மட்டும் போதுமா? வா பறக்கலாம் என ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று மேலிருந்து கீழே பார்க்கச் சொல்கிறார். புல்வெளியில் வில் யூ மேரி மீ? என எழுதப்பட்ட இந்த பிரம்மாண்ட காட்சி இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகிறது. 

இந்த புரோமோ வெளியானது முதலே ஆச்சர்யத்தில் ஆழ்ந்த ரசிகர்கள், “இதென்ன சீரியலா இல்லை ஷங்கர் படமா? வேற லெவலில் புரொபோஸ் செய்கிறார்களே!” என்று சொல்லி இந்த காட்சிகளை பகிர்ந்து வருகின்றனர். 

ALSO READ: "இவங்க 2 பேரும் நம்ம லிஸ்ட்லயே இல்லயே?".. வெறித்தனமாக வெளியான BiggBossJodigal புரோமோ!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Zee tamil serial love proposal in helicopter trending

People looking for online information on NeethaneEnthanPonvasantham, Trending, Zee Tamil will find this news story useful.