90ஸ் ஹீரோயின் தேவயானி மீண்டும் ஜீ தமிழ் சீரியல் மூலம் ரீ-என்ட்ரி... இந்த புரோமோவை பாத்தீங்களா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

80ஸ், 90ஸ் காலங்களில் தனது குடும்ப பாங்கான அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தேவயானி. அவருக்கு அறிமுகம் என்பதே தேவை இல்லை. அந்த அளவிற்கு கமல், அஜித், விஜய் போன்ற அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார். கொஞ்சம் கூட கிளாமர் இல்லாமல் குடும்ப பாங்கான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர். பல விருதுகளையும் பெற்றுள்ளார். சினிமாவில் மட்டுமல்லாது அதன் பிறகு சீரியல்களிலும் தேவயானி முன்னணி இடம் வகித்தார். 90ஸ் கிட்ஸ்களில் பலருக்கு கோலங்கள் சீரியல் இன்றைக்கும் பேவரைட்டாக இருக்கின்றது.

இந்நிலையில் அந்த சீரியலில் நடிகை தேவயானியுடன் பிரபல நடிகர்களான தீபா வெங்கட், ஈஸ்வரமூர்த்தி, திரு செல்வம், போன்ற பலர் நடித்திருந்தனர். அப்பொழுதே ஆறு வருடங்களுக்கு மேல் ஓடி மெகா ஹிட்டடித்த குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கிட்டதட்ட 12 வருடங்கள் கழித்து மீண்டும் பேமஸ் கோலங்கள் ஜோடியான  அபி பாஸ்கர் ஜோடி இணைய உள்ளனர். ஆனால் இம்முறை சன் டிவியில் இல்லை. ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் "புதுப்புது அர்த்தங்கள்" என்ற சீரியலில் தான் தேவயானி மீண்டும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் புரோமோ வெளியாகியுள்ளது. ஒரு குடும்ப தலைவியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த சீரியல் ஹிட்டடிக்கும் என்பதில் எந்தத் சந்தேகமும் இல்லை. தற்போது இந்த புரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Devayani

Zee tamil new devayani serial promo ஜீ தமிழில் புதிய சீரியல்.

People looking for online information on Devayani will find this news story useful.