சென்னை, 24, பிப்ரவரி, 2022, Zee Tamil Run Baby Run: ஜீ தமிழ் தொலைக்காட்சி, புதுமையான நிகழ்ச்சிகளான சர்வைவர், ராக்ஸ்டார், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ், சூப்பர் மாம், டான்ஸ் ஜோடி டான்ஸ், மற்றும் புதிய நிகழ்ச்சியான சூப்பர் குயின் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களை வழங்கி வருகிறது.
புதிய ரியாலிட்டி ஷோ
இந்த வரிசையில் இப்போது செம ஜாலியான புதிய ரியாலிட்டி ஷோ ஒன்று சேர்கிறது. ஆம், ‘ரன் பேபி ரன்’ என்கிற முற்றிலும் மாறுபட்ட ஒரு விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றை ஜீ தமிழ் ஒளிபரப்பு செய்யவிருக்கிறது. உடல் மற்றும் மன வலிமை இரண்டும் சேர்ந்த இந்த போட்டாப் போட்டி நிகழ்ச்சியில், இரண்டு அணிகள் களமிறங்கி, சுவாரஸ்யமான சவால்களை எதிர்கொள்ள வருகிறார்கள்.
‘ரன் பேபி ரன்’ நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 27, மதியம் 1 மணிக்கு முதல் எபிஸோட் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது. நகைச்சுவைக்கும், டைமிங் காமெடிக்கும் பெயர்பெற்ற துடுக்கான நடிகர் ஜகன், இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு வாரமும் ஒரு மணிநேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ள இந்த ‘ரன் பேபி ரன்’ நிகழ்ச்சியில், தொலைக்காட்சி மற்றும் தமிழ் திரைப்படத்துறையை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
புதுமையான விளையாட்டு
இந்த தனித்துவமான ரியாலிட்டி ஷோ, போட்டியாளர்களின் உடல் மற்றும் மன திடத்தினை சோதிக்கும். இதுவரைக் கண்டிராத கடுமையான போட்டிகளை அவர்கள் சந்திப்பார்கள். ஈமோஜிகளை வைத்து பதில்களை கண்டுபிடித்து மறைந்துள்ள ஒரு பிரபலத்தை அறியும் பந்தையம் துவங்கி, பல்வேறு புதுமையான விளையாட்டுகளை இந்த நிகழ்ச்சியில் நேயர்கள் காணலாம்.
ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் போட்டியாளர்கள் பல பரிசுகளை வெல்லலாம். இருப்பினும்,‘டோன்ட் மூவ் சேலஞ்ச்’, ஒவ்வொரு சுற்றையும் வெல்லும் அணிகளுக்கு கடும் சவாலாக இருக்கும். இந்த பகுதியின் போது, போட்டியாளர்கள் ஒரு அசைவாலோ, அல்லது வெறும் கண் சிமிட்டல் காரணமாகவோ அதுவரை வெற்றி பெற்ற அனைத்தையும் இழக்க நேரலாம். பரபரப்பான ஒவ்வொரு சுற்றிலும் ஆறு போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து பரிசுத்தொகையை தட்டிச்செல்ல மோதுவார்கள்.
குடும்பத்தினருடன் ரசிப்பார்கள்
இந்த புதிய நிகழ்ச்சிகள் பற்றி பேசிய ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின், சவுத் க்லஸ்ட்டர் ஹெட் , திரு. சிஜூ பிரபாகரன் அவர்கள், “நேயர்களுக்கு வித்தியாசமான மற்றும் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளை தொடர் முயற்சிகளின் மூலம் வழங்கி வருவதே ஜீ தமிழின் வலிமையாகும். நாங்கள் புத்தம் புதிய விளையாட்டு பந்தையங்களை கண்டுபிடித்து, அவற்றில் தமிழக தொலைக்காட்சி மற்றும் சினிமா துறைகளை சேர்ந்த பிரபலங்களை பங்கேற்க அழைத்து வருகிறோம்.
சவாலான போட்டிகள் மற்றும் காமெடியான தருணங்கள் நிறைந்து இருப்பதால்,‘ரன் பேபி ரன்’ நிகழ்ச்சியை நேயர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அமர்ந்து ரசிப்பார்கள்” என்று தெரிவித்தார்.