'ஏன் இப்படி பண்றீங்க'.. HATRES குறித்து அர்ச்சனா மகள் சாரா.. DD-யின் மாஸ் அட்வைஸ்! சிங்கப் பொண்ணுப்பா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

VJ Archana: சின்னத்திரைகளில் தொகுப்பாளினியாக வலம் வரும் விஜே அர்ச்சனா பின்னர் பிக்பாஸிலும் தோன்றினார்.

Zara Archana concern about hatres VJ DD viral reply
Advertising
>
Advertising

பிக்பாஸில் அர்ச்சனா

90ஸ் கிட்ஸ்க்கு பரீச்சயமான அர்ச்சனா, சன் டி.வி, ஜீ தமிழ், விஜய் டிவி என முன்னணி தமிழ் சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதுடன், பிக் பாஸ் சீசன் 4ல் ஒரு முக்கிய போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் இன்னும் பெருவாரியான மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

Zara Archana concern about hatres VJ DD viral reply

அர்ச்சனா, சாரா

முன்னதாக விஜய் டிவியின் மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை அர்ச்சனா, அண்மையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த டாக்டர் திரைப்படத்தில் அர்ச்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதில் அர்ச்சனாவின் மகள் சாராவும் அவருக்கு மகளாகவே அப்படத்தில் நடித்திருந்தார். அத்துடன் பல விளம்பரங்களிலும் சேர்ந்து நடிக்கும் இவர்கள் இருவரும் தங்கள் சமூக வலைதளங்களில் மிகவும ஆக்டிவாக இருந்து வருகின்றனர். ஆம் இருவரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் புதிய தயாரிப்புகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தியும் விளம்பரங்கள் செய்தும், ரசிகர்களுடன் உரையாடியும் வந்தனர்.

நெகடிவ் கமெண்ட்ஸ்

எனினும் சில ஹேட்டர்ஸ்களும் இவர்களுக்கு தொடர்ச்சியாக வெறுப்புகளையும் நெகடிவிட்டிகளையும் தரத் தொடங்கியுள்ளனர். இவர்கள் பேசிய பல விஷயத்தையும அவர்கள் விளையாட்டாகக் கூட இல்லாமல் வன்மத்துடன் ட்ரோல் செய்யத் தொடங்கியதாக தெரிகிறது. அண்மையில் கூட அர்ச்சனா மற்றும் சாரா இருவரும் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சி லிங்கிலும் இவர்களின் வெறுப்புகள் தொடர்ந்துள்ளது.

Also Read: "உங்கள் நான்..".. SuperSinger-ல் BiggBoss கமல் போல் பேசிய CookWithComali மூக்குத்தி முருகன்.. கலக்குறாரே மனுசன்.. ஆல் ரவுண்டர்ப்பா!

சாரா வேதனை

இதனால் கவலை அடைந்த சாரா, ஒரு பதிவில், “எல்லோருக்கும் வணக்கம், நாங்களும் மனிதர்களே. எங்களுக்கும் கவலைகள் உள்ளம. ஏன் அம்மாவையும் என்னையும் இப்படி எல்லாம் திட்டித் தீர்க்கிறீர்கள். ஹேட் பண்ணக் கூடிய வார்த்தைகளால் திட்டுவதால் மனம் ஹர்ட் ஆகிறது. இத்தனைக்கும் அதிகமாக பெண்களே மோசமான வார்த்தைகளால் திட்டி இருக்கிறீர்கள்.

எங்கள் குடும்பத்தினர் அன்பை மட்டுமே எடுத்துக் கொள்வோம், அதையே திரும்பிக் கொடுக்கவும் செய்வோம். எங்களை உங்களுக்கு பிடிக்காவிடின் உங்களது அந்த கருத்தையும் நாங்கள் ஏற்கிறோம். ஆனால் நெகட்டிவான கருத்தால் நோகடிக்காதீர்கள்!” என உருக்கமாக கேட்டிருந்தார்.

கண்டுக்காத சாரா..

இந்நிலையில் இதற்கு பிரபல விஜேவும் நடிகையுமான டிடி என்கிற திவ்யதர்ஷினி இதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ள வேண்டாம் சாரா என ஆறுதல் கூறியுள்ளார். டிடியுடன் சேர்ந்து மேலும் பலரும் சாரா மற்றும் அர்ச்சனாவுக்கு ஆதரவு தெரிவித்து, தேற்றி வருகின்றனர். அவர்களுக்கு மீண்டும் விஜே அர்ச்சனா நன்றி தெரிவித்துள்ளார்.

Also Read: Body Shaming சர்ச்சை!..   சாய் பல்லவிக்கு ஆதரவாக ஆளுநர் தமிழிசை! பெண்களுக்கு சொன்ன அறிவுரை!

மற்ற செய்திகள்

Zara Archana concern about hatres VJ DD viral reply

People looking for online information on Archana Zara, Zara Archana will find this news story useful.