உடல் எடையை குறைக்க களமிறங்கிய யுவராஜ் சிங் மனைவி ஹேசல் கீச்.. யுவி போட்ட வைரல் கமெண்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மற்றும் அவரது மனைவி ஹேசல் கீச் தம்பதிக்கு கடந்த ஜனவரியில் ஆண் குழந்தை பிறந்தது.

Advertising
>
Advertising

ஹேசல் கீச், பில்லா படத்தில் நடிகர் அஜித்துடன் நடித்தவர், பல இந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்த ஜோடி நவம்பர் 30, 2016 அன்று திருமணம் செய்து கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்கின்றனர்.

சண்டிகருக்கு அருகிலுள்ள ஃபதேகர் சாஹிப்பில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர், மேலும் கோவாவில் ஆடம்பர திருமணமும் நடைபெற்றது, இதில் திரைப்படம் மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி 25ல், யுவராஜ் சிங் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது" என்ற நற்செய்தியை சமூகத்துக்கு யுவராஜ் சிங் தெரிவித்தார்.

தங்கள் குழந்தையின் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் யுவராஜ் சிங் கேட்டுக் கொண்டார். ஓரியன் கீச் சிங் என குழந்தைக்கு பெயரிட்டனர்.

இந்நிலையில் குழந்தை பிறப்புக்கு பின் உடல் எடை அதிகமானதை குறைக்க மீண்டும் ஜிம்மிற்கு செல்லும் வீடியோவை ஹெசல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவுக்கு யுவராஜ் சிங், மனைவியை ஊக்கமளிக்கும் விதமாக 'Yo hazey go hazey' என கமெண்ட் செய்துள்ளார். 

 

சல்மான் கான் நடித்த 2011 ஆம் ஆண்டு வெற்றிப் படமான ‘பாடிகார்ட்’ படத்தில் கரீனா கபூரின் தோழியாக நடித்ததற்காக ஹேசல் மிகவும் பிரபலமானவர். அமீர் கானின் மகள் ஈரா கான் இயக்கிய ‘யூரிபீடிஸ்’ மீடியா என்ற நாடகத்திலும் இவர் நடித்தார். 2013 ஆம் ஆண்டில், பிக் பாஸ் சீசன் 7 இல் பங்கேற்பாளராகவும் இருந்தவர்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Yuvraj Singh wife Hazel Keech is sweating it out at the gym

People looking for online information on Hazel Keech, Yuvraj Singh will find this news story useful.