இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மற்றும் அவரது மனைவி ஹேசல் கீச் தம்பதிக்கு கடந்த ஜனவரியில் ஆண் குழந்தை பிறந்தது. ஹேசல் கீச், பில்லா படத்தில் நடிகர் அஜித்துடன் நடித்தவர், பல இந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த ஜோடி நவம்பர் 30, 2016 அன்று திருமணம் செய்து கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்கின்றனர். சண்டிகருக்கு அருகிலுள்ள ஃபதேகர் சாஹிப்பில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர், மேலும் கோவாவில் ஆடம்பர திருமணமும் நடைபெற்றது, இதில் திரைப்படம் மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த ஜனவரி 25ல், யுவராஜ் சிங் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது" என்ற நற்செய்தியை சமூகத்துக்கு யுவராஜ் சிங் தெரிவித்தார். தங்கள் குழந்தையின் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் யுவராஜ் சிங் கேட்டுக் கொண்டார்.
"எங்கள் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும், இன்று கடவுள் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையைப் கொடுத்துள்ளார் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆசீர்வாதத்திற்காக நாங்கள் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம், மேலும் குழந்தையை உலகிற்கு வரவேற்கும் போது எங்கள் தனியுரிமையை நீங்கள் (மீடியா, ரசிகர்கள்) மதிக்க விரும்புகிறோம். அன்புடன், ஹேசல் மற்றும் யுவராஜ்,” என்று கிரிக்கெட் வீரர் யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், “இந்த அன்னையர் தினத்தில் ஒரு தந்தையாக எனது பயணத்தைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தாய்மார்களுக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயம், சமமான பங்களிப்பை வழங்குவது தான் என்று நான் நம்புகிறேன். அது டயப்பரிங் அல்லது உணவூட்டுவதாக இருக்கலாம்". என இன்ஸ்டாகிராமில் குழந்தையின் வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளார். மேலும் யுவராஜின் மனைவியும் குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சல்மான் கான் நடித்த 2011 ஆம் ஆண்டு வெற்றிப் படமான ‘பாடிகார்ட்’ படத்தில் கரீனா கபூரின் தோழியாக நடித்ததற்காக ஹேசல் மிகவும் பிரபலமானவர். அமீர் கானின் மகள் ஈரா கான் இயக்கிய ‘யூரிபீடிஸ்’ மீடியா என்ற நாடகத்திலும் இவர் நடித்தார். 2013 ஆம் ஆண்டில், பிக் பாஸ் சீசன் 7 இல் பங்கேற்பாளராகவும் இருந்தவர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8