இந்தியன் 2 படத்தில் யுவராஜ் சிங்கின் தந்தை.. அவரே வெளியிட்ட வேறவெவல் BTS PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புக்கு முந்தைய BTS போட்டோவை யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | Halloween Day: தனது மகனுடன் பிரபல ஹாலோவீன் மேக்கப்.. நடிகை கனிகா வெளியிட்ட சூப்பர் போட்டோஸ்!

கடந்த 1996-ஆம் ஆண்டு ஷங்கா் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த   படம் இந்தியன். ஏ.‌எம். ரத்னம் தயாரிப்பில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் இந்தியன்.

இந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி உள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வால் & கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளனர். இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் திருப்பதி நகரில் நடந்து வருகிறது.

சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன் தனது ரசிகர்களை சந்தித்த வீடியோக்கள் வெளியாகி இருந்தன. மேலும் கமலின் புதிய தோற்றம் குறித்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோக்ராஜ் வெளியிட்டுள்ளார். மேலும் படப்பிடிப்புக்கு முந்தைய மேக்கப் போட்டுக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, "பஞ்சாப் சிங்கம் இந்தியன் 2 படத்திற்காக தயாராகிறது" என பதிவிட்டுள்ளார். மேலும் தனது ஹோட்டல் அறையில் எடுத்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read | மெக்காவுக்கு புனித பயணம் செய்த யுவன் ஷங்கர் ராஜா.. இஹ்ராம் அணிந்து பிரார்த்தனை! வைரல்

தொடர்புடைய இணைப்புகள்

Yuvraj Singh Father Yograj Doing a Role in Indian 2

People looking for online information on Indian 2, Kamal Haasan, Shankar, Yuvraj Singh, Yuvraj Singh Father Yograj, Yuvraj Singh Father Yograj in Indian 2 Movie will find this news story useful.