நானே வருவேன் படத்திற்காக.. உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர்களுடன் இணைந்த யுவன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ், செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும்  'நானே வருவேன்'  படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்'.. ரிலீஸை ஒட்டி சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் விவரம்!

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. இந்த படத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் பின்னணி இசை பணிகளுக்காக ஹங்கேரி புடாபெஸ்ட்டில் உள்ள பிரபல இசைக்கலைஞர்களுடன் இணைந்து இசைப்பணிகளை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே இதே குழுவுடன் இசைஞானி இளையராஜா இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா  நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். இவர் தமிழில் Paris Paris படத்திலும் நடித்துள்ளார்.

'நானே வருவேன்' படம் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் படநிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி சேனலான சன் டிவி கைப்பற்றி உள்ளது என்றும், டிஜிட்டல் ஒடிடி உரிமத்தை பிரபல அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும், ஆடியோ உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Also Read | VIKRAM VEDHA: பிரபல தமிழ் இசையமைப்பாளருடன் ஹிருத்திக் ரோஷன்.. சூப்பர் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Yuvan shankar raja with Budapest Orchestra for Naane Varuven Movie

People looking for online information on Dhanush, Naane Varuven, Selvaraghavan, Yuvan Shankar Raja will find this news story useful.