"யுவனை நான் மதம் மாற்றினேனா?" - அவரது மனைவி வெளியிட்ட ஆரம்ப கால மெசேஜ் ஸ்கிரீன்ஷாட்டுகள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் 2014-ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக கூறி, தன் பெயரை 'அப்துல் காலிக்' என்று அறிவித்தார். இதனிடையே 2015-ஆம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அழகான பெண் குழந்தை இருக்கிறது.

Advertising
Advertising

இந்நிலையில் இன்ஸ்ட்டாகிராம் லைவில் வந்த அவரது மனைவியிடம் பலரும், "ஏன் யுவனை முஸ்லீமாக மாற்றினீர்கள். நீங்கள் இந்துவாக மாறுவீர்களா?" போன்ற கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர் "அவர் இஸ்லாமை தேர்ந்தெடுத்ததில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம் மதத்தில் இருந்த பிறகுதான் எனக்கு அவரைத் தெரியும். எங்கள் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. அவருக்கு மற்ற மதங்களை விட இஸ்லாம் மதம் பிடித்திருந்தது. மிகப்பெரிய கேள்விகளுக்கான விடைகளை அவர் குர்ஆனில் பெற்றுக்கொண்டார். அதனால் தான் அவர் இஸ்லாம் மதத்தை தேர்ந்தெடுத்தார். எங்களுடைய ஒரே எண்ண அலைவரிசையால் நாங்கள் இணைந்திருக்கிறோம். பெரிய விஷயங்களைப் பற்றிய எங்களுடைய உரையாடல்கள் மூலம் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு இருக்கிறோம்" என்று அதிரடியாக பதிலளித்தார்.

இந்நிலையில் தற்போது அவர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் முதன் முதலில் பேசிய ஸ்கிரீன்ஷாட்டுகளை வெளியிட்டுள்ளார்.  அவரது மனைவி கூறும் பொழுது "இப்பொழுது விளக்கமாக சொல்கிறேன். நானும் எனது கணவரும் 2014-ஆம் ஆண்டு, ரம்ஜான் நேரத்தில் முதன் முதல் பேசிக்கொண்ட வார்த்தைகள் இவைதான். அப்பொழுதே நான் அவர் ஏன் இஸ்லாமுக்கு மாறினார் என்று அறிந்து கொள்ள ஆவலாக இருந்தேன். அதை பற்றி கேட்டதற்கு அது மிகவும் பெர்சனலான விஷயம் என்று கூறி அவர் மறுத்துவிட்டார். அப்போது எங்களுக்கு தெரியாது நாங்கள் பிற்காலத்தில் திருமணம் செய்து கொள்வோம்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

யுவன் மனைவி வெளியிட்ட மெசேஜ் ஸ்கிரீன்ஷாட் yuvan shankar raja wife shares early chat screenshots

People looking for online information on Religion, Yuvan Shankar Raja, Zafroon Nizar will find this news story useful.