அஜித் நடிக்கும் வலிமை திரைப்படம் குறித்து யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் இசையில் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
வலிமை படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா வைரஸ் சூழலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சூழலில் இப்போது மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. மேலும் அண்மையில் நடந்த பைக் சேசிங் காட்சியின் போது அஜித் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்தின் வலிமை படம் குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வலிமை படத்தை இசை ரெக்கார்டிங் செய்து கொண்டிருக்கும் புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அப்போது கண்டிப்பாக ஒரு மாஸ் தீம் மியூசிக் அல்லது பாடல் இருக்கிறது என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.