காமன்வெல்த் அரங்கில் மாஸ் காட்டிய யுவன் பாடல்.. வேற லெவலில் கொண்டாடும் ரசிகர்கள்!!.. VIRAL வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் வைத்து கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி தொடங்கி இருந்தது.

Advertising
>
Advertising

மொத்தம் 72 நாடுகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட விளையாட்டு நிகழ்ச்சியில், 5,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் முடிவில், ஆஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் முதலிடத்தையும், இங்கிலாந்து 176 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, கனடா 92 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும், இந்தியா 61 பதக்கங்களுடன் (22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம்) நான்காவது இடத்தையும் கைப்பற்றி இருந்தது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் களமிறங்கிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பலர், ஏராளமான விளையாட்டுப் பிரிவுகளில் பதக்கங்களை வென்று பல சாதனைகளையும் புதிதாக படைத்திருந்தனர்.

காமன்வெல்த் போட்டிகள் அனைத்தும் நிறைவு பெற்றதை அடுத்து, இதன் நிறைவு விழா பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் சமீபத்தில் நடைபெற்று இருந்தது. இதன் நிறைவு விழாவில், ஏராளமான கலை நிகழ்ச்சிகளும் அங்கே நிகழ்ந்திருந்தது.

இந்நிலையில், அந்த கலை நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான பாடலுக்கு பெண்கள் நடனமாடிய வீடியோ, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. பாலா இயக்கத்தில் ஆர்யா மற்றும் விஷால் ஆகியோர் நடித்திருந்த "அவன் இவன்" திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

அவரது இசையில், இந்த படத்தில் இடம்பெற்றிருந்த "டியா டியா டோலே" என்னும் பாடலுக்கு மூன்று பெண்கள், காமன்வெல்த் நிறைவு விழாவில் நடனமாடியுள்ளனர். பல நாடுகளிலிருந்து வந்த பார்வையாளர்கள் மத்தியில், தமிழில் யுவன் இசையமைத்த பாடலின் இசை ஒலித்திருப்பது தொடர்பான வீடியோ, ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

அது மட்டுமில்லாமல், இது தொடர்பாக அங்கே நடனமாடிய பெண்கள் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியிலும் யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Yuvan shankar raja song in commonwealth games closing ceremony

People looking for online information on Avan Ivan, Commonwealth games 2022, Yuvan Shankar Raja will find this news story useful.