மங்காத்தா பட அஜித் INTRO குறித்த சந்தோஷ் நாராயணனின் ட்வீட்.. செம்ம REPLY செய்த யுவன்! வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மங்காத்தா படத்தில் அஜித் குமாரின் அறிமுக காட்சி குறித்த சந்தோஷ் நாராயணனின் ட்வீட்டுக்கு யுவன் சங்கர் ராஜா பதில் ட்வீட் செய்துள்ளார்.

Yuvan Shankar Raja Reply Tweet to Santhosh Narayanan Mankatha Reference
Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | அடடே.. ரஞ்சிதமே டான்ஸ் மூலம் வைரலான பெண்ணுக்கு.. ராஷ்மிகாவின் அசத்தல் கிஃப்ட்..

நடிகர் அஜித்தின் 50 வது படமாக  2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரம்ஜானை முன்னிட்டு மங்காத்தா படம் வெளியானது. இந்த படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் , யுவன் சங்கர் ராஜா இசையில், நடிகர் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ராய் லட்சுமி, பிரேம் ஜி, அஞ்சலி, ஆண்ட்ரியா நடிப்பில் வெளியானது.

கிளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்து, சன் பிக்சர்ஸ் நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ரேடான் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தமிழகத்தில் வெளியிட்டது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் நடிகர் அஜித் வில்லனாக நடித்து ரசிகர்களையும், விமர்சகர்களையும் பாராட்ட வைத்திருந்தார். தமிழ் சினிமாவில் இந்த படம் டிரெண்ட் செட்டர் ஆனது. வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது.  மேலும் 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் முதல் 100 கோடி ரூபாய் வசூலித்த படமாக மங்காத்தா அமைந்தது.

Images are subject to © copyright to their respective owners.

இச்சூழலில் தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான  சந்தோஷ் நாராயணனிடம் ட்விட்டர் பக்கத்தில் ஒரு ரசிகர் 'மகான்' படத்தில் வரும் அரியாசனம் பாடலின் காட்சியை பகிர்ந்து, "இந்தப் பாடலை இசையமைப்பதற்கு முன்னர் எந்த போதை பொருளை எடுத்துக் கொண்டீர்கள்?" எனக்  கேட்டு, சந்தோஷ் நாராயணனை டேக் செய்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

அந்த ரசிகரின் பதிவில் சந்தோஷ் நாராயணனும் பதில் அளித்திந்தார். அந்த ட்வீட்டில், அஜித் நடிப்பில் வெளியான 'மங்காத்தா' படத்தின் அறிமுக காட்சியின் கிளிப்பை பகிர்ந்து, "திரும்ப திரும்ப இந்த சீனை பார்த்துக்கொண்டிருந்தேன்" என சந்தோஷ் நாராயணன் பதில் அளித்திருந்தார். இந்த ட்வீட்டுக்கு பதில் அளித்த யுவன் சங்கர் ராஜா, "நீங்கள் மிகவும் இனிமையானவர்" என சந்தோஷ் நாராயணனை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Also Read | தென் தமிழகத்தின் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவிலில் பிரபல ஹீரோயின் சாமி தரிசனம்..! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Yuvan Shankar Raja Reply Tweet to Santhosh Narayanan Mankatha Reference

People looking for online information on Mankatha Reference, Santhosh Narayanan, Yuvan Shankar Raja will find this news story useful.