"கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன்.." யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்த படு வைரல் POST

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அரவிந்தன் எனும் திரைப்படம் மூலம், இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | நிறை மாத கர்ப்பத்திலும் செம்ம டான்ஸ் ஆடிய நடிகை ஸ்ரேயா.. வைரலாகும் OLD THROWBACK வீடியோ

இத்தனை ஆண்டுகளில், எக்கச்சக்க ஹிட் பாடல்களை கொடுத்துள்ள யுவனுக்கு இசை ரசிகர்கள் மத்தியில் மிக உயரமான இடமுண்டு.

அவரது குரலும், அவர் இசையமைக்கும் பாடல்களும் ஆண்டுகள் கடந்து, ரசிகர்களின் பிளே லிஸ்ட்டை ஆக்கிரமித்து வருகிறது.

25 ஆண்டுகள்..

அதே போல, கடந்த மார்ச் மாதம், தன்னுடைய திரை பயணத்தில் 25 ஆண்டுகளை யுவன் ஷங்கர் ராஜா கடந்திருந்த நிலையில், சிறப்பு நிகழ்ச்சி ஒன்றும் நடைபெற்றிருந்தது. கடைசியாக, வீரமே வாகை சூடும், வலிமை உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்திருந்த யுவன் ஷங்கர் ராஜா, அடுத்ததாக மாமனிதன், குருதி ஆட்டம், நானே வருவேன், ஏஜென்ட் கண்ணாயிரம், விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என்ற  எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில், யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

கருப்பு டீ ஷர்ட், கூடவே லுங்கி..

கருப்பு டீ ஷர்ட் ஒன்றுடன் லுங்கி அணிந்து கொண்டு, கடற்கரை ஒன்றின் ஓரம் நிற்கும் யுவன் ஷங்கர் ராஜா, தன்னுடைய கேப்ஷனில், "Dark Dravidian , Proud Tamizhan" (கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன்) என குறிப்பிட்டுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இந்த புகைப்படம் மற்றும் கேப்ஷன், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக தங்களின் கருத்துக்களையும் ரசிகர்கள் கமெண்ட்டில் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், "ஹிந்தி தெரியாது போடா" என்ற வாசகம் இடம்பெற்றிருந்த டீ ஷர்ட் ஒன்றை யுவன் ஷங்கர் ராஜா அணிந்திருந்ததும், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | ”வடிவேல் சாருக்கு நன்றியும் முத்தமும்”…. மாரிசெல்வராஜ் நெகிழ்ச்சி... viral pics

 

தொடர்புடைய இணைப்புகள்

Yuvan shankar raja latest pic gone viral

People looking for online information on யுவன் ஷங்கர் ராஜா, Music Director Yuvan Shankar Raja, Yuvan Shankar Raja, Yuvan shankar raja latest pic will find this news story useful.