BEAST அரபிக்குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடிய யுவன் சங்கர் ராஜா! அந்த வெட்கத்தை பாருங்கய்யா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாட்டுக்கு யுவன் சங்கர் ராஜா ஜாலி நடனம் ஆடி உள்ளார்.

Advertising
>
Advertising

இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். 150 மில்லியன் வியூசை இந்த பாடல் கடந்துள்ளது.

மேலும் இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி, பாடகி ஜோனிதா காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே, நெல்சன் மகன் ஆத்விக், திவ்யபாரதி, சஞ்சனா, ஷிவானி நாராயணன், கீர்த்தி சுரேஷ், சுஜிதா, கனிகா உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்தனர்.

இந்த பட்டிலில் இசையமைப்பாளர் யுவனும்  இடம் பிடித்துள்ளார். பீஸ்ட் அரபிக்குத்து பாட்டுக்கு செமயாக நடனம் ஆடி உள்ளார். இது யுவன் ஆடிய முதல் நடனம் என கூறப்படுகிறது. முகம் முழுக்க வெட்கத்துடன் யுவன் இந்த நடனத்தை புரிந்துள்ளார்.யுவன் இசையில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மெகாஹிட் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர்.  பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

BEAST அரபிக்குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடிய யுவன் சங்கர் ராஜா! அந்த வெட்கத்தை பாருங்கய்யா! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Yuvan Shankar Raja dancing beast arabic kuthu song

People looking for online information on Anirudh, Arabic Kuthu, Beast, Yuvan Shankar Raja will find this news story useful.