8 ஆவது Behindwoods Gold Medals Award மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.

முதல் நாளான நேற்று (21.05.2022) நடிகர்கள் மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், நடிகைகள் சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, தர்ஷா குப்தா, இயக்குனர்கள் வெங்கட் பிரபு, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், பாடகர்கள் அந்தோணி தாசன், ஜோனிதா காந்தி, கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நடனம், விருது என முதல் நாள் நிகழ்ச்சி முழுவதும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து, பல பிரபலங்களும் விருதுகளை பெற்றிருந்தனர். இதில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து தளபதி விஜய் படம் குறித்து பேசிய விஷயங்கள், அரபிக்குத்து பாடலுக்கு சன்னி லியோன் நடனமாடி இருந்தது உள்ளிட்ட பல நிகழ்வுகள், அதிக அளவில் வைரலாகி இருந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள்
இதற்கு அடுத்தபடியாக, இரண்டாம் நாளான இன்று (22.05.2022), சினிமா உள்ளிட்ட நிறைய துறைகளில் இருந்து ஏராளமான பிரபலங்கள், Behindwoods கோல்டு மெடல்ஸ் விருதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இயக்குனர்கள் வெற்றிமாறன், செல்வராகவன், விக்னேஷ் சிவன், நெல்சன், வினீத் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளர்கள் அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, ரவி பஸ்ரூர், நடிகர் எஸ்ஜே சூர்யா, ஆர் ஜே பாலாஜி, நடிகைகள் பூஜா ஹெக்டே, கல்யாணி பிரியதர்ஷன், சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன், கீர்த்தி ஷெட்டி, அரசியல் தலைவர் சீமான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நடனமாடிய யுவன் ஷங்கர் ராஜா
இதில், பல பிரபலங்களும் விருதுகளை வாங்கி அசத்தி இருந்தனர். இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, Behindwoods கோல்டு மெடல்ஸ் விருது நிகழ்வில் நடனமாடி இருந்த வீடியோக்களும் தற்போது அதிகம் லைக்கினை அள்ளி வருகிறது. டிக்கிலோனா படத்தில் வரும் "பேரு வெச்சாலும்" என தொடங்கும் பாடலுக்கு குட்டி நடன அசைவுகள் போட்டு பட்டையைக் கிளப்பி இருந்தார் யுவன் ஷங்கர் ராஜா.
இசையில் யுவன் கில்லி என்பதை போல, நடனத்திலும் கில்லியாக கலக்கிய வீடியோ பற்றி, ரசிகர்கள் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.